சுடச்சுட

  
  14

  * பாப்பா பாடும் பாட்டு
  ஆசிரியர்: கவிஞர் எல்.பிரைட்
  பக்கம்: 128; விலை: ரூ.60.
   
  சிறுவர்-சிறுமியர்களுக்கான நூறு பாடல்கள் அடங்கிய நூல். முயலை வென்ற ஆமை, ஆப்பத்தை பங்கு போட்ட குரங்கு, சிங்கத்தை காப்பாற்றிய எலி போன்ற குழந்தைகளுக்கான கதைகளையும் இனிய பாடல்களாக வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். சின்ன சின்ன ஓவியங்கள் பாடல்களுக்கு அழகு சேர்க்கின்றன. (வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம், த.பெ.எண்:1447, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை-17, போன்: 044-2434 2926).
   
  * வரலாற்றில் வாழ்பவர்கள்
   ஆசிரியர்: எஸ்.சங்கரன்
   பக்கம்: 144; விலை: ரூ.60.
   
   சாக்ரடீஸ், கரிபால்டி, டார்வின், ஜோன் ஆஃப் ஆர்க், மார்டின் லூதர், வாஸ்கோடகாமா, கலீலியோ, ஷேக்ஸ்பியர், லியோ டால்ஸ்டாய், ஹிப்பாக்ரடீஸ், தாமஸ் எடிசன், மேடம் க்யூரி, அலெக்சாண்டர் ஹம்போல்ட் முதலான 52 பேரின் வாழ்க்கை வரலாறும் சாதனைகளும் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது. (வெளியீடு: பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை-4, போன்: 044-2464 3074).
   
  * சின்ன சின்ன பொது அறிவு
   சிறுவர்களுக்கும்-பெரியவர்களுக்கும்
   தொகுப்பு: சி.இலிங்க தமிழ்மொழி
   பக்கம்: 160; விலை: ரூ.100.
   
   ஓலைச்சுவடியிலிருந்து திருக்குறள் 1812இல் அச்சு வடிவம் கண்டது. திருக்குறளின் முதல் உரையாசிரியர் மணக்குடவர். ஆஸ்திரேலியாவிலுள்ள யூகலிப்டஸ் மரங்கள் 435 அடி உயரம் வரை வளர்கின்றன. ஊசியுடன் நூல் தரும் மரங்கள் மெக்ஸிகோவில் உள்ளன என்பது போன்ற நூற்றுக்கணக்கான தகவல்கள் நிரம்பிய புத்தகம். (வெளியீடு: சுபா பதிப்பகம், பிளாக் எண்:11, ஊஞஅ ஜெயின் சுதர்சனா அபார்ட்மெண்ட்ஸ், 174, மாடம்பாக்கம் ரோடு, ராஜகீழ்ப்பாக்கம், சென்னை-73).
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai