சுடச்சுட

    
    8

     கதைப்பாடல்

    புத்தகம் படிக்கும் ஆர்வம்-யார்க்கும்
     எளிதில் வருவ தில்லை
     படிக்கப் புகுந்தவர் பழக்கம்- அவரை
     விட்டு நீங்குவதில்லை!
     
     வறுமையுற்ற குடும்பம்-தன்னில்
     ஆபிரகாம் லிங்கம் பிறந்தார்...
     அரிய கல்வி கற்க -மிகுந்த
     ஆர்வத்தோடு இருந்தார்!
     
     தச்சுத் தொழில் புரி தந்தை-அவர்க்குத்
     தகுந்த வருவாய் இல்லை...
     புத்தகம் வாங்கிடப் பணமோ-யாரும்
     தந்திட முன்வர வில்லை!
     
     அயலூர் சென்று நடையாய்-புத்தகம்
     இரவல் பெற்று வருவார்...
     சோர்வில் லாமல் படித்துப்-பின்
     சென்று திருப்பிக் கொடுப்பார்!
     வழக்கமாய் ஒரு நாளில்-லிங்கன்
     சிம்னி விளக்கில் படித்தார்...
     எண்ணை தீர்ந்த நேரம்-நூலை
     சன்னல் அருகில் வைத்து
     
     அயர்ந்து உறங்கி விட்டார்-எழுந்து
     மறுநாள் புத்தகம் பார்த்து
     அதிர்ச்சிக் குள்ளவர் ஆனார்!-புத்தகம்
     மழையில் நனைந்தது கண்டார்!
     
     உரியவரிடத்தில் சென்று-லிங்கன்
     நடந்த வற்றைச் சொல்ல...
     "சரியாய் விலையைக் கொடுத்திடு-இன்றேல்
     வயலில் உழைத்திடு'என்றார்!
     
     மூன்று நாட்கள் தொடர்ந்து-நூலுக்
     குரியவர் வீட்டில் உழைத்தார்...
     சம்பளம் பெற்றிட வில்லை-ஆனால்
     புத்தகம் பெற்றுக் கொண்டார்!
     
     அதிபர் வாஷிங்டன் கதை-நூலை
     ஆபிரகாம் படித்தே இருக்க...
     அந்த நூலும் லிங்கனை-ஒருநாள்
     அதிபர் ஆக்கியது உண்மை!
     
     புத்தகப் பிரியர் லிங்கன்-போலே
     முயற்சி செய்திட வேண்டும்!
     எத்தனை துன்பம் வரினும்-கற்றல்
     தொடர்ந்து இருக்க வேணும்!
     
     -தமிழ் அன்பன்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai