சுடச்சுட

  
  9

  ""அம்மா எனக்கொரு ஆசை
   அப்பா காதில் போட்டுடுங்க!
   அம்மா சொன்னால் அன்புடனே
   அப்பா செய்வார் விருப்புடனே!
   
   ஐந்து வயதும் முடிந்ததுமே
   அரசுப் பள்ளியில் சேர்த்திடுங்க!
   ஐயம் தீரக் கற்றிடுவேன்
   அதுவே எனக்குச் சிறப்பாகும்!
   
   காசைக் கரைக்கும் கல்விக்கூடம்
   ஆசைப் படுதல் வீணம்மா!
   நெஞ்சில் பட்டதைச் சொல்லுகிறேன்
   வாஞ்சை காட்டி உதவம்மா!
   
   அரசுப் பள்ளியில் படித்தவரும்
   அலுவலர் நிலையினில் உயர்ந்திட்டார்!
   அறிவில் சிறந்த அப்துல் கலாம்
   அரசுப் பள்ளியில் படித்தவரே!
   
   வெண்ணெய் கையில் இருக்குதம்மா!
   மணக்கும் நெய்யும் உருக்கிடலாம்!
   உண்மை ஊரார் உணர்ந்திடவும்
   என்னை அங்கே சேர்த்திடுங்க!
   
   அரசின் பலவிதச் சலுகைகளை
   உரிமையில் பெற்றுக் கற்றிடலாம்!
   விரயம் செய்து பணமெல்லாம்
   இறைத்திட வேண்டாம் கெஞ்சுகிறேன்!''
   
   கோ.தமிழரசன், செஞ்சி.
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai