சுடச்சுட

  
  7

  அதேதான் நமக்கும்
   ஒரு ஊரில் ஒரு பேக்கரிக்காரர் இருந்தார். அவர் ஒரு பவுண்டு ரொட்டியைச் சற்றே எடைகுறைவாக எல்லோருக்கும் விற்றுக் கொண்டிருந்தார். ரொட்டியை யார் எடை போட்டுப் பார்க்கப் போகிறார்கள் என்பது அவரது எண்ணம்! யாரும் எதுவும் அவரிடம் கேள்வி கேட்கவில்லை. அவரை நம்பி எல்லோருமே ரொட்டிவாங்கிச் சென்றனர்.
   விவசாயி ஒருவர் ஒரு பவுண்டு வெண்ணெயை பேக்கரிக்காரருக்கு விற்று வந்தார். ஒருநாள் அந்த பேக்கரிக்காரர், விவசாயி கொடுக்கும் வெண்ணெய் ஒரு பவுண்டு அளவு சரியாக உள்ளதா என்று எடை போட்டுப் பார்த்தார். அப்போது அளவு குறைவாக இருந்தது என்பதைத் தெரிந்துகொண்ட அந்த பேக்கரிக்காரர் விவசாயி மீது மிகவும் கோபம் அடைந்தார். இதற்குத் தீர்வு காண நினைத்தார். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அப்போது நீதிபதி விவசாயியிடம் ""வெண்ணெயை எடைபோட எந்த எடை மிஷினை உபயோகிக்கிறாய்?'' என்று கேட்டார்.
   அதற்கு அந்த விவசாயி "நியாயம்' என்று பதிலளித்தார்.
   ""அது என்னது "நியாயம்' என்று ஒரு தராசா?'' என்று கேட்டார் நீதிபதி.
   அதற்கு விவசாயி நீதிபதியிடம், ""ஐயா, என்னிடம் சரியான எடைக் கற்கள் இல்லை. ஆகவே நான் ஒரு அளவுகோல் கொண்டு எடை போடுவேன்'' என்றார்.
   உடனே நீதிபதி, "" அதைத்தான் கேட்கிறேன்...,வேறு எப்படி வெண்ணெயை எடை போடுவாய்?'' என்று கேட்டார்.
   அதற்கு அந்த விவசாயி, நீதிபதியிடம், "ஐயா, பேக்கரிக்காரர் என்னிடம் நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே வெண்ணெய் வாங்குவது வழக்கம். நானும் அவரிடமிருந்து ஒரு பவுண்டு ரொட்டியை வாங்கி வருவேன். என் வீட்டில் ஒரு தராசு உள்ளது. ஒவ்வொரு நாளும் பேக்கரிக்காரரின் ஒரு பவுண்டு ரொட்டியை ஒரு தட்டிலும், அந்த எடைக்குச் சமமான வெண்ணையை மற்றொரு தட்டிலும் நிறுத்து எடுத்துப் பொட்டலம் கட்டிக் கொள்வேன். அந்தப் பொட்டலத்தைத்தான் பேக்கரிக்காரருக்குக் கொடுப்பேன். ஆகவே அதில் குறையோ குற்றமோ இருந்தால், அது என் தவறு இல்லை. அது முற்றிலும் பேக்கரிக்காரரைச் சார்ந்தது'' என்று சொன்னார்.
   பேக்கரிக்காரர் தலைகுனிந்து நின்றார்.
   நாம் மற்றவர்களுக்கு என்ன செய்கிறோமோ, அதேதான் நமக்கும் விதிக்கப்படும்.
   
   -மயிலை மாதவன்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai