சுடச்சுட

  
  11

   விடியற் காலை நேரத்தில்
   விதவித மான பறவைகள்
   மடியே இன்றி எழுந்திடுமே;
   மகனே நீயும் எழுந்திடுவாய்!
   
   கதிர வன்தான் எழுமுன்னர்
   கறவைப் பசுவும் எருதெல்லாம்
   அதிகா லையிலே எழுந்திடுமே;
   அம்பி நீயும் எழுந்திடுவாய்!
   
   உதய கால நேரத்துள்
   உலகில் எல்லாப் பூக்களுமே
   முதலில் மலர்ந்து மணம்பரப்பும்;
   முனைந்து நீயும் எழுந்திடுவாய்!
   
   பறவை விலங்கு பூக்களெல்லாம்
   பனியில் கூட விடியலிலே
   உறக்கம் நீங்கி எழுந்திருக்க
   உனக்கு மட்டும் உறக்கம் ஏன்?
   
   விடியற் காலை நேரத்தில்
   விரைந்து எழுந்து கற்பதனால்
   கடின மான பாடமும்தான்
   கண்ணா உனக்கு எளிதாகும்.
   
   உதய நேர உற்சாகம்
   உந்தன் சோர்வை நீக்கிடுமே;
   இதயம் கூடப் பலமாகும்;
   என்றும் வாழ்வு நலமாகும்!
   
   கே.பி.பத்மநாபன், கோவை.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai