சுடச்சுட

  
  13

   1. அமைதியான பையன்... அடிக்காமல் அழுவான். அவன் யார்?
   2. இலை இல்லை, பூ இல்லை, கொடி உண்டு! அது என்ன?
   3. அதிவேகக் குதிரை, ஆடியபடி செல்லும் குதிரை. போட்ட கோட்டைத் தாண்டாமல் ஓடும் குதிரை... அது என்ன?
   4. எங்க அம்மா போட்ட சிக்கலை யாராலும் பிரிக்க முடியாது! அது என்ன?
   5. ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் ஓடுவான், மற்றவன் நடப்பான். யார் இவர்கள்?
   6. உருளும் வீட்டைச் சுற்றி கருப்பு வேலி! அது என்ன?
   7. இவன் வலை தயாரித்து விரித்து வைப்பான்! ஆனால் மீன் பிடிக்க மாட்டான்! இவன் யார்?
   8. தலை மட்டும் கொண்டு, ஊரெல்லாம் சுற்றும் ஆனால் சிறகில்லை... அது என்ன?
   9. ஆயிரம் பேருக்கு ஓர் இடைக்கச்சை... அது என்ன?
   விடைகள்:
   1. ஐஸ்
   2. கைரேகை
   3.
   புகை வண்டி (ரயில்)
   4. இடியாப்பம்
   5. கடிகார முட்கள்
   6. கண் இமை
   7. சிலந்தி
   8. தபால் தலை
   9. துடைப்பம்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai