Enable Javscript for better performance
அங்கிள் ஆன்டென்னா- Dinamani

சுடச்சுட

    

    கேள்வி: கழுதைப் புலிகள் கூட்டமாக வந்தால், சிறுத்தை பயந்து ஓடி விடுமாமே, உண்மையா?

    பதில்: சிறுத்தைகள் மட்டுமல்ல சிங்கம்கூட கழுதைப்புலிகளின் கூட்டத்தைக் கண்டால், அப்படியே நைசாக எஸ்கேப் ஆகிவிடும் என்பது உண்மைதான்.

    இந்தப் பயம் எப்படி வந்தது? கழுதைப் புலியை விட சிறுத்தை வேகமாக ஓடக்கூடியதுதான். அதிக சக்தி வாய்ந்ததுதான். கழுதைப் புலியைக்கூட சிறுத்தை வேட்டையாடி உண்ணத்தான் செய்யும். கழுதைப் புலியைக் கண்டால் சிறுத்தைக்கு ஒன்றும் பயம் கிடையாதுதான். இருந்தாலும் கழுதைப் புலிகள் கூட்டமாக வந்தால், சிறுத்தை பயப்படுவதற்குக் காரணம் இருக்கிறது.

    கழுதைப் புலி தனியாக இருந்தால் சிறுத்தைக்குப் பயப்பட்டு, இடத்தைக் காலி செய்துவிடத்தான் முயற்சிக்கும்.

    ஆனால் கூட்டமாக கழுதைப் புலிகள் இருந்தால் அவற்றுக்கு அசுர பலம் வந்து விடும். நம்ம பள்ளித் தோழர்கள்கூடக் கூட்டமாக, நான்கைந்து பேர் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால், தனித் துணிச்சலுடன் காணப்படுவார்கள், செயல்படுவார்கள். அதுபோலத்தான். கூட்டமாக இருந்தால் நம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணம் கழுதைப் புலிக்கு ஏற்படுவதால், தங்களைத் தாக்க வரும் சிறுத்தையை, சிங்கத்தை தைரியமாக எதிர்த்து நின்று போராடும். இந்தச் சமயங்களில் சிறுத்தைகள் கழுதைப் புலி கூட்டத்தின் நடுவே மாட்டிக்கொண்டால், அம்போதான்! போட்டுத் தாக்கு, என்று அவை முடிவெடுத்த பிறகு, சிறுத்தையால் தனி ஆளாக எதிர்த்து நிற்பதற்குத் திராணியில்லாமல் போய்விடுகிறது. இதனால்தான் கழுதைப் புலிகள் கூட்டமாக வந்தால், சிறுத்தை எதிர்த்து நிற்பதில்லை. தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக, இடத்தை விட்டு அகன்று விடுகிறது.

    இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம், ஒற்றுமையே உயர்வு தரும். ஒற்றுமை யாரையும் எதிர்க்கும் துணிச்சலைத் தரும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai