சுடச்சுட

  
  ilamaiyil kal

  இடம்-வீடு

  மாந்தர்-ஏழுமலை(6ஆம் வகுப்பு மாணவன்),அவன் தந்தை மாரிமுத்து, தாய் வடிவு,

  ஆசிரியர் சங்கரன்.

  மாரிமுத்து: டேய் ஏழுமலை! மணி ஆறாயிட்டுது பாரு, போய் மாட்டுக்கு தீவனம் வச்சிட்டு, அப்படியே அந்த முக்கு கடையில இந்த கத்திரிக்காயைக் கொடுத்துட்டு, சீட்டு எழுதி வாங்கிட்டு வா!

  ஏழுமலை: அப்பா! முக்குக் கடைக்கு 9மணிக்கு மேலதான் போக முடியும். இப்ப போனா, அந்த சங்கரன் சார் கண்ணுல பட்டா பிடிச்சுக்குவார்.

  மாரிமுத்து: பிடிச்சா என்னடா? படிக்க பிடிக்கலை, பள்ளிக்கூடத்துக்கு வரமாட்டேன்னு சொல்ல வேண்டியதுதானே...!

  ஏழுமலை: இல்லப்பா...., சார் ஏற்கனவே தெருப்பையங்க கிட்டே திரும்ப திரும்ப சொல்லி விட்டிருக்காரு..

  வடிவு: ஆமாங்க..., நேற்று நாம சந்தைக்கு போயிருந்தப்ப கூட நம்ம வீட்டுப் பக்கம் வந்து தேடிட்டுப் போயிருக்கார். பக்கத்து வீட்ல சொன்னாங்க. எதுக்கும் நீங்க பள்ளிக்கூடத்துக்கு போய் ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துட்டா நல்லதுதானே.

  மாரிமுத்து: (எரிச்சலுடன்) இதென்னடா தொல்லையாப்போச்சு! இப்ப இவன் படிச்சு என்ன கலெக்டர் வேலைக்கா போகப்போறான்? நமக்கு நம்ம பொழப்பு இருக்கு, அப்புறம் எதுக்கு படிப்பு, வேண்டாம்னு சொன்னா விட வேண்டியதுதானே!

  வடிவு: கொஞ்சம் மெதுவா பேசுங்க...(தெருவைப் பார்த்தபடி) அதோ...,சங்கரன் சார் நம்ம வீட்டுக்கு வந்துட்டார்! வயசுல பெரியவர்...,வாத்தியார் வேறே! கொஞ்சம் பார்த்து மரியாதையா பேசுங்க.

  சங்கரன்: ஏழுமலை,....ஏழுமலை!

  மாரிமுத்து: வாங்க சார்! இப்படி உட்காருங்க...,என்ன இந்தப் பக்கம்? நேத்துக் கூட வந்துட்டுப் போனதா சொன்னாங்க...

  சங்கரன்: அது வந்துப்பா...,ஏழுமலை இரண்டு வாரமா பள்ளிக்கூடத்துக்கு வரலே...,பசங்ககிட்டே கேட்டா அவன் இனிமே பள்ளிக்கூடத்துக்கு வரமாட்டான்....,அப்பாகூட பால் வியாபாரம் பார்க்கப் போறான்னு சொன்னாங்க. அதான் என்னன்னு பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்.

  மாரிமுத்து: அப்படித்தான் சார்! இவன் படிச்சு என்ன செய்யப்போறான்...,என்கிட்டே இருபது மாடு இருக்கு. காய்கறித்தோட்டம் வேறே வெச்சிருக்கேன். இந்த வேலைகளைக் கவனிச்சுக்கிட்டாப் போதுமே! படிச்ச பையன்களே வேலை கிடைக்கலேன்னு அலையறானுங்க...,அதுக்கு இப்பவே நம்ம தொழிலைப் பார்த்துக்கிட்டு நிம்மதியா இருக்கலாம்...என்ன நான் சொல்றது?...,சரிதானே!

  சங்கரன்: சரிதான்...,உன் தொழிலை உன் மகன் பார்த்துக்கறது தப்பில்லே...,அதுக்கு ஆறாம் வகுப்புலேயே படிப்பை விடவேண்டாமே....! சின்னப் பையன்தானே கொஞ்சநாள் படிக்கட்டும். அப்புறம் தொழிலைப் பார்க்கட்டும். கொஞ்சம் எழுதப் படிக்கத் தெரிஞ்சா நல்லதுதானே!

  மாரிமுத்து: இந்த வேலைக்கு என்ன சார் படிப்பு வேண்டியிருக்கு? என் கூட இருந்தால் தொழிலை நல்லா கத்துக்குவான். அது போதும்!

  சங்கரன்: ஏழுமலை! நீ அப்பாகிட்டே சொல்லுப்பா! பத்தாம் வகுப்பு வரைக்குமாவது படிக்கிறேன்னு!

  ஏழுமலை: இல்லே சார்! எனக்கும் படிக்கப் பிடிக்கலை! கணக்கு, அறிவியல் எல்லாம் படிச்சு என்ன செய்யப் போறேன்.

  சங்கரன்: அப்படிச் சொல்லாதே! படிக்கிறது எவ்வளவு அவசியம்னு உனக்கு இப்பப் புரியாது....,பிற்காலத்துலே புரியும்! நிறைய பேர் அப்ப படிக்காம, இப்ப வருத்தப் படறாங்க....,தெரியுமா?

  ஏழுமலை: நான் படிக்கப் போயிட்டா அப்பாவுக்கு யார் உதவி செய்யறது?

  சங்கரன்: காலையிலேயும், சாயங்காலமும் அப்பாவுக்கு உதவி செய்...! பகல்லே பள்ளிக்கூடத்திற்கு வா! லீவு நாள்ளே இந்த வேலையைக் கொஞ்சம் கூடச் செய்! வீட்டிலேயும் தினம் கொஞ்ச நேரம் படி! போதும்!

  மாரிமுத்து: அவன் என்ன, வேலைக்கா போகப் போறான்? படிச்சுட்டு இந்த வேலையைத்தானே செய்யப்போறான்? இதுக்கு எதுக்கு படிப்பு?

  சங்கரன்: படிச்சா வேலைக்குப் போகணும்னு இல்லேப்பா...! சொந்தத் தொழிலும் பார்க்கலாம்...,இப்ப மாடு வளர்க்கறதுலே, தோட்டம் போடறதுலே எல்லாம் நிறைய புதுப்புதுக் கண்டுபிடிப்புகள் வந்திருக்கு. இவன் நாலு எழுத்து படிச்சா, அதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு இந்தத் தொழிலையே இன்னும் நல்லா செய்யலாம்.

  மாரிமுத்து: சார்! புத்தகம் சொல்லிக்குடுக்கறதைவிட அனுபவம் நல்லா சொல்லிக் குடுக்கும். நான் ரெண்டாம் வகுப்புதான் படிச்சேன். இப்ப சம்பாதிக்கலே? வீடு, மாடு, தோட்டம், துரவுன்னு நல்லாயிருக்கேன். படிச்ச பையன்கள் கூட வேலை இல்லாம, கையிலே நாலு காசு இல்லாம இருக்கானுங்க...,போதும் சார் படிப்பு! அவ்வளவுதான்....நீங்க கிளம்புங்க.

  சங்கரன்: சரிப்பா! "இளமையில் கல்' அப்படின்னு சொல்லுவாங்க...,படிப்புக்கு வயசு கிடையாது. ஆனா சின்ன வயசுல படிக்கிறது, வாழ்க்கையிலே நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். ஏதோ மனசு

  கேட்கலே. பத்தாம் வகுப்பாவது படிச்சா நல்லதுன்னு நினைச்சு வந்தேன். பரவாயில்லே. வரட்டுமா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai