சுடச்சுட

  

  காட்சி-2

  இடம்-கோயில் அரசமரத்தடி.

  மாந்தர்-மாரிமுத்து, ஏழுமலை, சங்கரன்.

  மாரிமுத்து: என்னடா, அந்த எலக்ட்ரீஷியன் ஐயா வீட்லே பாலுக்கு ரூபாய் வாங்கிட்டு வந்தியா?

  ஏழுமலை: ஆமாம்ப்பா! மொத்தம் 684 ரூபான்னு கணக்கு சொன்னாங்க. இதோ கணக்கு சீட்டும் குடுத்தாங்க.

  மாரிமுத்து: என்னது? 684 ரூபாதானா? அவங்க வீட்ல பதிவு பால் போக அதிக பால் வாங்கினாங்க...காய்கறி வேறே வாங்கியிருக்காங்க. ஆயிரம் ரூபாகிட்டே வரணுமே.

  ஏழுமலை: அவங்க கணக்கு எழுதின பேப்பரை கொடுத்திருக்காங்க...பாருங்க...

  மாரிமுத்து:(சலிப்புடன்) யாருக்கு தெரியும் கணக்கு! எனக்குதான் எழுத படிக்கவே தெரியாதே. நான் மனக்கணக்குலதான் சொன்னேன் நீயே பாரு.

  ஏழுமலை: சரிப்பா! கத்திரிக்காய் ஒண்ணாம் தேதி 400 கிராம்..., ஒரு கிலோ 35 ரூபான்னா 400க்கு எவ்வளவு? (யோசித்துப் பார்த்து விரல் விட்டு எண்ணி கணக்கு பார்க்கிறான்)

  மருதமுத்து: என்னடா இவ்வளவு நேரமா...? மனக்கணக்குப் போட வேண்டியதுதானே....400 கத்திரிக்காய் 14 ரூபாய்....,அடுத்து என்ன கணக்கு பாரு...

  ஏழுமலை: (பயந்தபடியே தலையைக் குனிந்து) இல்லப்பா! கணக்கு 2 பக்கம் இருக்கு. எனக்குத் தெரியலே.

  மாரிமுத்து: (எரிச்சலுடன்) என்ன...கொடுமைடா....,இப்ப என்ன செய்யறது? அந்த அம்மா ஒரு மாசமாத்தான் நம்ம கிட்டே பால் வாங்குறாங்க....,எப்படிக் கேட்கறது?

  (சங்கரன் சார் தற்செயலாக அங்கு வருகிறார்)

  சங்கரன்: என்ன ஏழுமலை! அப்பாவும், மகனும் கையிலே பேப்பர், ரூபாயெல்லாம் வெச்சுக்கிட்டு என்ன செய்யறீங்க?

  ஏழுமலை: வணக்கம் சார்! அது வந்து, பால் கணக்கு பேப்பர். 684 ரூபா வருது...,ஆனா அப்பா ஆயிரம் ரூபாகிட்டே வரும்னு சொல்லுறாங்க.

  மருதமுத்து: ஆமாய்யா! எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனா மனக்கணக்கு போட்டுப் பார்த்தா ஆயிரம் ரூபா கிட்டே வருது. என்ன செய்யறதுன்னு தெரியலே.

  சங்கரன்: எங்கிட்டே குடு பார்ப்போம். (இரண்டு பேப்பரையும் புரட்டிப் பார்த்து) இதுல கூட்டல், கழித்தல், பெருக்கல் எல்லாத்துலேயும் ஏகப்பட்ட தப்பு இருக்கு. வேறே பேப்பர்லே எடுத்து எழுதி, கணக்கு பார்ப்போம். (பத்து நிமிடம் கழித்து) ஆமா, மாரிமுத்து, நீ சொன்னா மாதிரி 1072ரூபாய் வருது!

  மாரிமுத்து: பார்த்தீங்களாய்யா! அந்த அம்மா எங்கள ஏமாத்தப் பார்த்திருக்கு!

  சங்கரன்: அவசரப்படாதே மாரிமுத்து! அந்த வீட்டு அம்மாவும் மூணாம் வகுப்புதான் படிச்சிருக்கு! வயசாயிட்டுது வேறே. அதனால கணக்குல தப்பு வந்திருக்கும். வேணும்னு செய்திருக்க மாட்டாங்க. உன்ன மாதிரி அவங்களுக்கும் கூட்டி, கழித்து, கணக்கு பார்க்கத் தெரியாதோ என்னமோ. நீ போய் இந்த பேப்பரைக் காட்டி சொல்லு. பாக்கி ரூபாயைக் குடுத்துடுவாங்க. சரி, நான் வரட்டுமா?

  மாரிமுத்து: (எழுந்து நின்று) சார், தப்பா நினைக்காதீங்க. என் மகனைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பறேன். கொஞ்சம் எழுதப் படிக்கச் சொல்லிக்குடுங்க. இந்த முட்டாள்தனமெல்லாம் என்னோட போகட்டும்.

  சங்கரன்: நல்லதுப்பா. (ஏழுமலையைப் பார்த்து) நாளையிலேர்ந்து வகுப்புக்கு வா. நேரம் கிடைக்கும்போது அப்பாவுக்கு உதவி செய். தொழிலையும் கத்துக்க.

  மாரிமுத்து: ரொம்ப நன்றி சார்!

  சங்கரன்: படிப்புங்கறது அறிவு வளர்ச்சிக்குத்தான். படிச்சிட்டு சொந்தத் தொழிலும் பார்க்கலாம். உன் மகன் பெரிய மாட்டுப் பண்ணையே வச்சு பத்து பேருக்கு வேலை கொடுப்பான் பாரு! பெரிய ஆளா வருவான்!

  (மூவரும் மகிழ்ச்சியாகச் சிரிக்கிறார்கள்)

  திரை

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai