Enable Javscript for better performance
இளமையில் வெல்! - \\\"பிரியன்ஷி சோமானி\\\'- Dinamani

சுடச்சுட

    

    இளமையில் வெல்! - "பிரியன்ஷி சோமானி'

    By dn  |   Published on : 16th July 2016 04:05 PM  |   அ+அ அ-   |    |  

    ilamaiyil vel

    இவர் "இந்தியாவின் நடமாடும் கணினி' என்று போற்றப்படுகிறார். கணித மேதை சகுந்தலா தேவியைப்போல் இவரும் ஒரு கணித மேதை ஆவார். இவரது தந்தை தன் வியாபார நிமித்தமாகத் தன் நண்பருடன் விவாதித்துக் கொண்டிருந்தார். இதைக் கவனித்துக் கொண்டிருந்த பிரியன்ஷி அதன் தீர்வை உடனே கூறினார். அப்பொழுது அவருக்கு 6 வயது மட்டுமே! அவர் தந்தை ஆச்சரியம் அடைந்தார்.

    ஏனெனில் 5 இலக்க எண்களை 4 இலக்க எண்களால் பெருக்கி வரும் தொகையை மனக்கணக்காக அவ்வளவு எளிதாக யாராலும் கூறிவிட முடியாது. அதுவும் 6 வயதுச் சிறுமியால் முடியவே முடியாது! அந்தச் சம்பவம் பிரியன்ஷியின் திறமையை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது.

    ஆண்டுதோறும் "மென்டல் கால்குலேஷன் உலகக் கோப்பை' என்னும் கணித நுண்ணறிவுத் திறன் போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகின்றன. 2010-ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற மென்டல் கால்குலேஷன் உலகக் கோப்பை போட்டியில் இவர் முதலிடம் பெற்றார். ஏறத்தாழ 16 நாடுகளில் இருந்து 37 கணித வல்லுநர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். அதில் இவர் மட்டுமே வயதில் மிகவும் சிறியவர் ஆவார். இந்தப் பட்டத்தை வென்றபொழுது இவருக்கு 12 வயது மட்டுமே! மேலும் கூட்டல், பெருக்கல், வர்க்கமூலம் அறிதல் (நவ்ன்ஹழ்ங் ழ்ர்ர்ற்ள்) ஆகிய எண்ணற்ற கணிதச் செயல்பாடுகளுக்கு இவர் மிகத் துல்லியமாக பேப்பர், பேனா எதையும் பயன்படுத்தாமல் மனதிலேயே கணக்கிட்டு விடை கூறியுள்ளார்.

    2011-ஆம் ஆண்டின் உலகக் கணித நாளுக்கு இவரே பெருமைமிகு இந்தியத் தூதுவராக (டழ்ங்ள்ற்ண்ஞ்ண்ர்ன்ள் ஐய்க்ண்ஹய் அம்க்ஷஹள்ள்ஹக்ர்ழ்) அறிவிக்கப்பட்டுள்ளார்.

    அபாகஸ் மற்றும் நுண் கணிதத்திறன் போட்டிகளில் 2006, 2007 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளில் இவரே தேசிய சாம்பியன் ஆவார். 2007-ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றார்.

    இவரது மற்றொரு அரிய சாதனை "சுடோகு' புதிர்களை அவிழ்த்தல் ஆகும். நீங்கள் பத்திரிகைகளில் இத்தகைய புதிர்களைக் கண்டிருக்கலாம். இவை பார்ப்பதற்கு மிக எளிமையாகத் தோன்றினாலும் இந்தப் புதிர்களுக்கு விடையளிப்பது அத்தனை எளிய காரியமல்ல! பிரியன்ஷி அரை மணி நேரத்திற்குள் முப்பதுக்கும் மேற்பட்ட "சுடோகு' புதிர்களுக்கு விடை அளித்துள்ளார். இதுவே ஒரு உலக சாதனை ஆகும்.

    இவரது திறமையைக் கண்ட "போகோ' என்னும் தொலைக்காட்சிச் சானல் ஒன்று "போகோ அதிசயக் குழந்தை' (ல்ர்ஞ்ர் அம்ஹக்ஷ்ண்ய்ஞ் ஓண்க்ள் அஜ்ஹழ்க்ள் 2010) என்னும் விருதை 2010ஆம் ஆண்டு வழங்கியுள்ளது.

    இந்தியர்களின் சாதனையைப் பதிவு செய்யும் "லிம்கா சாதனைப் புத்தகம்' (கண்ம்ஸ்ரீஹ ஆர்ர்ந் ர்ச் தங்ஸ்ரீர்ழ்க்ள்) இவரது சாதனையைப் பதிவு செய்துள்ளது.

    கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் 2014-ஆம் ஆண்டு இவரது பெயரை "நினைவாற்றல் மற்றும் நுண்ணறிவுத் திறன்' என்னும் பக்கங்களில் பதிவு செய்துள்ளது.

    குஜராத் மாநில மக்கள் இவரை "எண்களின் தோழி' என அன்போடு அழைக்கின்றனர். முடிவில்லாத எண்களைப் போலவே யாராலும் முறியடிக்க முடியாத சாதனைகளை இவர் மென்மேலும் புரிய வாழ்த்துவோம்!

    -என்.லக்ஷ்மி பாலசுப்ரமணியன், கடுவெளி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai