Enable Javscript for better performance
கருவூலம்- Dinamani

சுடச்சுட

  

  கருவூலம்

  By dn  |   Published on : 16th July 2016 03:51 PM  |   அ+அ அ-   |    |  

  2

  கஜக... தகஜக...' வென்று புரளும் அலைகளோடு மிகப் பெரிய நீர்ப்பரப்பான கடலை எத்தனை நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டிருக்கலாம்! பெரும்பாலும் காற்று வாங்க "பீச்'சுக்குப் போவதாகச் சொல்லுவார்கள்! ஆனால் பிரம்மாண்டமான நீர்ப்பரப்பை தரிசிக்கவே நாம் கடற்கரைக்குச் செல்கிறோம்! அலுப்பற்ற காட்சி அது!

  நாம் வசிக்கும் இவ்வுலகில் கடலே மாபெரும் பரப்பைக் கொண்டுள்ளது! சுமார் 361 மில்லியன் சதுர கி.மீ! நிறைந்துள்ள நீர் 135,00,00000 கன கி.மீ!

  இவ்வளவு பெரிய பரப்பைக் கொண்டாலும், அதிக ஆழமிருந்தாலும், நீராவியால் நீரிழப்பு ஏற்பட்டாலும், மழையால் நீரை மறுபடியும் சேகரித்துக்கொண்டு ஆர்ப்பரித்து வருகிறது கடல்! கடல் நீரில் உப்புத் தன்மையில் அதிக வேறுபாடுகள் ஏதுமில்லை!

  அட்சய பாத்திரம்!

  உப்பு! ஆண்டொன்றுக்கு சுமார் 6மில்லியன் டன் உப்பை நம் சாப்பாட்டுக்குத் தருகிறது கடல்! முத்துக்களும், வைரங்களும், டின், தோரியம், டைட்டேனியம் ஆகியவற்றிற்கான மூலப்பொருட்களும் கடலில் உண்டு. ஏன் தங்கமும் வெள்ளியும் கூட உண்டு! ஆனால் அவற்றைப் பிரித்தெடுக்க ஆகும் செலவு மிக அதிகமாகிறதாம்! புரோமின், மக்னீசியம், சல்ஃபர் மற்றும் மாங்கனீஸ் ஆகியவையும் கூட கடலில் இருக்கிறது! கடலிலிருந்து பெறத்தக்க எண்ணெய் வளம் பிரமிக்கத்தக்கது!

  மின்சாரம்

  மீன் வளங்களோ.., ஏராளம் என்பது அனைவரும் அறிந்ததே! கடல் நீர்ப்பரப்பில் புவிஈர்ப்பு விசையால் உயர்ந்தும் பின் வீழும் அலைகள் (பஐஈஉ),

  வெவ்வேறு ஆழங்களில் ஏற்படும் வெப்ப வேறுபாடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி பல வகைகளில் மின்சாரம் தயாரிக்கிறார்கள்.

  குடிநீர்

  தற்போது கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் பெருவாரியான நாடுகளில் செயல்படுத்தப்படுகிறது. நம் தமிழ்நாட்டில் கூட இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப் படுகிறது.

  சதுப்பு நிலக் காடுகள்

  வெப்ப மண்டல, மிக வெப்ப மண்டலப் பகுதிகளில் கடலோரங்களில் அலை பரவும் பகுதிகளில், குறிப்பாக சதுசதுப்பான சேற்றுப் பகுதிகளில் நிலைபெற்று வளரும் ரைசோபோரா, அவிசினியா ஆகிய மரங்களும், பெரும் செடிகளும் சதுப்பு நிலக் காடுகள் (அலையாத்திக் காடுகள்) எனப்படுகின்றன. இவை கடல் நீரிலேயே வளர்கின்றன. சீறிவரும் நீரலைகள் கரையைக் கடக்கும்போது இவை பாதுகாப்பு அரண்கள் போன்று அலைகளின் வேகத்தைக் குறைத்து, நிலப்பகுதியைக் காக்கின்றன. மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரத்தில் இக்காடுகள் காணப்படுகின்றன. சுனாமி போன்ற பேரலைகளிலிருந்து நம்மைக் காக்க கடற்கரைதோறும் இக்காடுகள் வளர்ப்பது நல்லது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும் இக்காடுகள் கடல் அரிப்பைத் தடுக்கிறது. சதுப்பு நிலப்பகுதி வளம் நிறைந்து இருப்பதால் நைட்ரேட், பாஸ்பேட் ஆகிய ஊட்டச் சத்துகள் அதிகம். அதனால் நுண்ணுயிர்த் தாவர வகைகளும், நீந்தும் பிராணிகளும், மீன் உற்பத்தியும் இந்த நீரில் அதிகம்! 20 முதல் 30 மடங்கு வரை இந்நீரில் மீன்வளம் காணப்படுகிறது! கடல் மீன்களுக்கும், கடல் உணவைச் சார்ந்திருக்கும் நீர்நாய், முதலை போன்ற பல்வேறு நிலம் மற்றும் நீர் வாழ் பிராணிகளுக்கும், மீன் உணவை உண்ணும் பறவை இனங்களுக்கும் இந்த சதுப்பு நிலக்காடுகள் வீடுகளாக உள்ளன. ஏனெனில் இப்பறவை இனங்கள் இக்காடு

  களில் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கின்றன. இக்காடுகள் இல்லாத பகுதிகள் பெரும்பாலும் கடலால் ஏற்படும் நில அரிப்பினால் பாதிக்கப்படுகின்றன. தற்போது இக்காடுகளை வளர்ப்பதன் அவசியத்தை உணர்ந்துள்ளோம்.

  பவளப்பாறைகள்

  ப்ரையோ úஸôவன்கள், சிலென்டெரேட்டுகிள் போன்ற பல்வேறு சிறப்பான கடல் உயிரினங்களால் சிறிய குன்றுகளாய்த் தோன்றி ஆண்டுகள் அநேகம் செல்லச் செல்ல தொடர்மலைகளாய் வெப்பமண்டலப் பகுதிகளில் தோன்றியவையே பவளப்பாறைகள்! இந்த வினோதமான பவளப்பாறைகளின் பகுதியில் நீர் மிகவும் தெளிவானது. தரமானது. மீனினங்களின் உற்பத்திக்கு ஏற்றது. தாவர வகைகளும் அதிகம். ஆஸ்திரேலியக் கடல்களில் பவளப்பாறை மலைகளின் நீளமும், அகலமும் அதிகம். தமிழகத்தில் மன்னார் வளைகுடாவில் பவளப் பாறைகள் உள்ளன என்பதை முன்பே கருவூலம் பகுதியில் அறிந்தோம். விலையுயர்ந்த பவளத்தால் ஆபரணங்கள் செய்கிறோமே..., அதற்கான பவளங்கள் இப்பாறைகளிலிருந்துதான் வெட்டி எடுக்கப்படுகின்றன.

  மற்றும் மீனினங்கள் அமரவும், மறையவும், உணவு

  தேடவும் இனப்பெருக்கம் செய்யவும் குஞ்சுகளை கவனிக்கவும், குட்டிகளோடு கூட்டமாய்ச் செல்லவும் வசதியான பகுதி பவளப்பாறைகளாகும். பவளப்பாறைகள் 15மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை.

  கடலின் ஆழம்

  கடலின் அதிக பட்ச ஆழம் 10,915 மீட்டர் ஆகும். சில மாதங்களுக்கு முன்பு ஜப்பானியக் கடலியல் நிபுணர்கள் க்வாம் என்ற பசிபிக் பெருங்கடலில் உள்ள தவின் அருகேயுள்ள கடலின் அதிகபட்ச ஆழத்தை 10,924 மீட்டர்கள் என்று உறுதி படுத்தியுள்ளனர்.

  கடல் நீரைக் குடிக்கலாம்

  ஆம்! கடல் நீரைக் குடிப்பதால் வயிற்றில் அமிலத் தன்மை குறையும். வயிற்று நீரில் (கேஸ்டிக் ஜூஸ்) போதிய அளவு அமிலத்தன்மை இல்லையாயின் அமிலத் தன்மையை உயர்த்தும்!

  (ஆனால் மிகவும் உப்புக் கரிக்கும்!)

  வளங்கள்

  கடலில் ஒரு செல் தாவரம் முதல் பெரிய திமிங்கிலம் வரை கடல் வாழ் உயிரினங்களைப் பட்டியல் போட்டுக் காட்டுவது எளிதல்ல! சுறா, திமிங்கிலம் உட்பட சுமார் பத்து லட்சம் வகை உயிரினங்களும், தாவர வகைகளும் கடலில் வாழ்கின்றன. இவற்றில் நமக்கு உணவாகப் பயன்படும் உயிரினங்கள் மிக அதிகம்!

  கடல் குதிரைகள்

  கடல் குதிரை என்பது சிறியதோர் உயிரினம். ஆசிய நாடுகளில் கடல் குதிரைகளுக்கு கிராக்கி அதிகம். இவை மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகின்றன. கிலோ ஒன்றுக்கு இந்திய மதிப்பில் 10000 ரூபாய் வரை தருகிறதாம்.

  கடல் குதிரைகள் இனப்பெருக்கம் வியக்கச் செய்யும் வினோதம். பெண் குதிரைகள் ஆண் குதிரைகள் வயிற்றுப் பகுதியில் காணப்படும் பை போன்ற பகுதியில் முட்டைகளை இடும். ஆண்மீன் அவைகளை அடைகாக்கும். சுமார் 150 முதல் 600 குஞ்சுகள் வரை வெளிவரும். சுற்றுப்புறச் சூழ்நிலைகள் சாதகமாக இருப்பின் அவை விரைவில் வளர்ந்து மூன்றே மாதங்களில் பருவமடையும்.

  இறால்கள்

  உலகில் ஏறத்தாழ 2ஆயிரம் இனங்களைச் சேர்ந்த இறால்கள் உள்ளன. பெருவாரியான மக்களின் உணவுத்தேவையை இவை ஈடு செய்கின்றன.

  முத்துச் சிப்பிகள் மற்றும் சங்குகள்

  விலையுயர்ந்த ஆபரணங்களில் முத்துக்கள் சிறப்பு வாய்ந்தவை. இவையும் நமக்குக் கடல் தரும் வரமாகும். முத்துக் குளிப்பதைப் போல் சங்கு குளிப்பும் ஆண்டுதோறும் மன்னார் வளைகுடாவில் நடைபெறும். கோயில் ஆராதனைகள், சங்கால் செய்யப்படும் ஆபரணங்கள், வீடுகளில் பூஜைகள் முதலியவற்றில் சங்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. தமிழகத்துச் சங்குகளுக்கு மேற்கு வங்காளத்தில் தனிச்சிறப்பு உண்டு. எனவே அம்மாநில சங்கு வணிகர்கள் தூத்துக்குடிக்கு வந்து தங்கி சங்குகளை ஏலத்தில் வாங்கிச் செல்வர். வங்கத்து மகளிர் கைகளில் சங்கு வளையல்கள் அணிந்திருந்தால் மணமானவர்கள் என்று பொருளாம்.

  முனைவர் வெ.சுந்தரம் எழுதிய

  "மீன் வளப்பூங்கா' நூலிலிருந்து

  "மயிலை மாதவன்'

  kattana sevai