சுடச்சுட

  
  1

  கடவுளைப் பார்க்க முடியும்!

  விவேகானந்தர் ராமகிருஷ்ணர்கிட்டே வந்து, ""சாமி இருந்தா எனக்கு காட்டுங்க'ன்னாரு ராமகிருஷ்ணர். ஒரு கிண்ணத்துல பாலைக் காட்டி ""இதுல என்ன இருக்கு?''ன்னாரு.

  விவேகானந்தர் யோசிச்சிட்டு, ""இந்தப் பால்ல தயிர், வெண்ணெய், நெய் எல்லாமே இருக்கு''ன்னாரு. ""மூணுத்தையும் காட்டு''ன்னாரு ராமகிருஷ்ணர். ""அதெப்படி? பாலைக் காய்ச்சி உறை ஊற்றினாத்தான் தயிர் கிடைக்கும். தயிரைக் கடைஞ்சாத்தான் வெண்ணெய். வெண்ணெய்யை உருக்கினாத்தான் நெய்''ன்னாரு விவேகானந்தர். ""அதேமாதிரிதான் பக்தி, தவம், ஞானம்னு ஒவ்வொரு நிலையையும் கடந்தால்தான் கடவுளைப் பார்க்க முடியும்''ன்னாரு ராமகிருஷ்ணர்.

  அ.ராஜா ரகுமான், கம்பம்.

  இவர் மட்டும் என்னவாம்?

  பெர்னாட்ஷா ஒரு விருந்து வீட்டில் வயலின் கச்சேரி கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு பெண்மணி அவரிடம் வித்வானைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டாள். ""இவர் கச்சேரியைக் கேட்கும்போது எனக்கு பாதருஸ்கியின் நினைவுதான் வருகிறது'' என்றார் பெர்னாட்ஷா. அதைக் கேட்டு அந்தப் பெண்மணி ""என்ன சொல்கிறீர்கள்... பாதருஸ்கி வயலின் வித்வான் இல்லையே?'' என்றாள். ""இவர் மட்டும் என்னவாம்?'' எனத் திருப்பிக் கேட்டார் பெர்னாட்ஷா.

  ஜோ.ஜெயக்குமார்,

  நாட்டரசன்கோட்டை.

  மரணத்திற்கு உயிர்

  ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் டைரக்டர் சாமுவேல் கோல்டுவின் மரணக் காட்சி ஒன்றைத் தன் படத்திற்காக இயக்கிக் கொண்டிருந்தார். சாகும் பாத்திரத்தில் நடித்த நடிகன் அவ்வளவு நன்றாக நடிக்கவில்லை. உடனே டைரக்டர் அவனைப் பார்த்து ""உன் மரணத்தில் உயிர் இல்லை அப்பா. அதற்குக் கொஞ்சம் உயிர் கொடு'' என்று சொன்னார்.

  பி.எஸ்.சின்னப்பாண்டியன்,

  சங்கரன்கோவில்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai