சுடச்சுட

    

    அன்பு கொள் (நீதிக் கதைகள்)

    ஆசிரியர்: கமலா சுவாமிநாதன்

    பக்கம்: 128; விலை: ரூ.70.

    குழந்தைகளுக்கான கதைகளை எழுதுவது ஒரு தனிக் கலை. அந்தக் கலை இந்த நூலின் ஆசிரியருக்கு கைவந்த கலை என்பதை ஒவ்வொரு கதையும் உணர்த்துகிறது. நல்ல நட்பு, செய்நன்றி அறிதல், ஆத்திரம் கொள்ளாதே முதலான 25 நீதிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. பள்ளிக் குழந்தைகள் இவற்றை நாடகமாக நடித்துக்காட்டி பாராட்டு பெறலாம். (வெளியீடு: வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17, போன்: 044-2434 2810).

    அதிசயங்கள்! உலக அதிசயங்கள்!

    ஆசிரியர்: தேனி.மு.சுப்பிரமணி

    பக்கம்: 112; விலை: ரூ.50.

    பண்டைய உலக அதிசயங்கள், இடைக்கால உலக அதிசயங்கள், புதிய உலக அதிசயங்கள், இயற்கை உலக அதிசயங்கள் என அதிசயங்கள் பற்றிய தகவல் தொகுப்பு. புகைப்படங்களுடன், உலக அதிசயங்கள் பற்றிய அரிய தகவல்களையும், அவற்றின் சிறப்பு நிலைகளையும் விரிவாகத் தொகுத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர். (வெளியீடு: தரணிஷ் பப்ளிகேஷன்ஸ், 11/466, வீரமாமுனிவர் சாலை, முகப்பேர் கிழக்கு, சென்னை-37).

    ஜிமாவின் கைபேசி

    ஆசிரியர்: கொ.மா.கோ.இளங்கோ

    பக்கம்: 64; விலை: ரூ.40.

    குழந்தைகளுக்கான திரைப்படம் பார்ப்பதுபோல் விளையாட்டாக ஆரம்பித்து, விறுவிறுப்பாக நடைபோட்டு, விஞ்ஞான வளர்ச்சியின் உச்சத்தைத் தொட்டு நம் இதயத்தையும் தொடுகிறது இந்த குறுநாவல். ஜி.மானஸô (ஜிமா) என்ற 3ஆம் வகுப்பு மாணவியும், அவளின் கைபேசி தோழி டிப்பியும் நெஞ்சில் நிறைகிறார்கள். (வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18, போன்: 044-2433 2424).

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai