சுடச்சுட

    

    • சோம்பல் உன்னை ஏமாற்றாமல் பார்த்துக்கொள். ஏனெனில் இன்று அதற்கு ஒருநாளைக் கொடுத்தால், அது அடுத்த நாளை தானே திருடிக் கொள்ளும்.

    -குரோகுவில்

    • ஏதும் அறியாமல் இருப்பது அறியாமை அல்ல. கண்டதெற்கெல்லாம் கவலைப்பட்டுக்

    காலத்தையும் வாழ்வையும் வீணாக்குவதுதான் அறியாமை.

    -பாரதியார்

    • நம்மைப்பற்றி நாம் மதிப்பிடும்போது நமக்கு உள்ள திறமைகளை வைத்து மதிப்பிடுகிறோம். ஆனால் மற்றவர்களோ நாம் செய்து முடித்த செயல்களை வைத்தே மதிப்பிடுகிறார்கள்.

    -லாங்பெலோ

    • செய்து முடிக்கப்பட்ட மாபெரும் சாதனைகள் அனைத்தும் செய்ய முடியாதவைகள் என்று

    முதலில் பலரால் நிராகரிக்கப்பட்டவைகள்தான்.

    -கார்லைல்

    • நம்பிக்கை என்பது சூரியனைப்போல. அதை நோக்கி நாம் செல்லச் செல்ல மனச்சுமை என்ற நிழல் நம் பின்னாலே போய்விடும்.

    -சாமுவேல் ஸ்மைல்ஸ்

    • பிறருக்கு உதவ முன்வரும் இதயம் யாருக்கு

    இருக்கிறதோ, அவனுக்குத்தான் பிறரைக் குறை கூற உரிமையும் உண்டு.

    -ஆபிரகாம் லிங்கன்

    • தவறை ஒப்புக்கொள்வதில் ஒருவன் வெட்கப்பட வேண்டியது இல்லை. ஏனென்றால்,

    அந்தத் தவறை உணருமளவு, இன்றைக்கு அவன் புத்திசாலி ஆகிவிட்டான் அல்லவா?

    -அலெக்சாண்டர் போப்

    • அதிகமாகக் கேள். குறைவாகப் பேசு.

    அதற்காகவே இயற்கை ஒரு நாவையும்,

    இரு காதுகளையும் படைத்திருக்கிறது.

    -காந்திஜி

    • காலையில் ஒரு மணி நேரத்தைத் தொலைத்து விட்டீர்களானால் நாள் முழுக்க அதைத் தேடிக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்.

    -லார்டு செஸ்டர்ஃபீல்டு

    • உலகில் இரண்டு கடினமான வேலைகள்

    இருக்கின்றன. ஒன்று நல்ல பெயர் எடுப்பது. இரண்டாவது அதைக் காப்பாற்றிக் கொள்வது.

    -காண்டேகர்

    • தண்டிப்பதைவிட தயவு காட்டுவது அதிக வல்லமையுள்ளது. நாய் நம்மைக்

    கடித்தால் அதை நாம்

    திருப்பியா கடிக்கிறோம்?

    -வாஷிங்டன்

    -என். நஜிமாபேகம்,

    டி.ஆர்.பட்டினம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai