சுடச்சுட

    
    14

    கேள்வி: தெருவின் நடுவே செல்லும் பாதாளச் சாக்கடைகளுக்கு, வட்ட வடிவில் ஒரு மூடி போட்டு வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். அதைத் திறந்து உள்ளே இறங்கி மனிதர்கள் வேலை செய்வதையும் பார்த்திருக்கிறோம். இந்த மூடிகள் ஏன் வட்ட வடிவில் மட்டுமே இருக்கின்றன தெரியுமா?
     பதில்: தெருக்களிலும், நடைபாதைகளிலும் பாதாளச் சாக்கடைகள் போகின்றன. அவற்றுக்குள் இறங்கி, அடைப்புகளை நீக்குவதற்கும், அசுத்த நீர் சீராகச் செல்வதற்கு குப்பைகளை அகற்றுவதற்கும் வசதியாக வட்ட வடிவ மூடிகள் போட்ட வழி அமைக்கப்பட்டிருக்கும். இதன் வழியாக மனிதர்கள் உள்ளே இறங்கி தங்கள் வேலையைச் செய்துகொண்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவர்களின் கஷ்டத்தையும் உணர்ந்திருப்பீர்கள். சரி, இப்போது கேள்விக்கான பதிலுக்கு வருவோம்.
     பூமிக்கு இயற்கையாகவே ஒரு அழுத்த சக்தி இருக்கிறது. இந்த அழுத்த சக்தியைத் தாங்குவதற்கு வட்ட வடிவம்தான் உகந்தது. மேலும் சதுர மற்றும் செவ்வக வடிவில் இந்த மூடிகளைத் தயாரிப்பதை விட வட்ட வடிவில் தயாரிப்பது மிகவும் எளிது என்கிறார்கள். இந்த மூடிகள் அதிக எடை கொண்டவையாக இருப்பதால், ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்வதற்கு வட்ட வடிவத்தில் இருந்தால் எளிதாக உருட்டிக்கொண்டுகூட போய்விடலாம். மேலும் இந்த மூடிகளைச் சரியாகப் பொருத்துவதும் மிக எளிது.
     இன்னொரு அதிமுக்கிய காரணம், வட்ட வடிவ மூடிகள் பாதாளத்துக்குள் விழுந்து விடுவதற்கு சான்úஸ இல்லை என்பதுதான். இந்த வடிவத்தின் உட்பகுதியில் உதடு போன்ற அமைப்பு இருக்கும். வெளிவட்டத்தை விட சற்றே சிறிதான வட்டமாக இது இருக்கும். இதனால் இவை கைதவறி விழுந்தாலும் உள்ளே விழுந்து விடாது. வட்டக்குகைக்குள் சற்று தள்ளி விழுந்தாலும் எளிதாக அசைத்துஅசைத்துப் பொருத்தி விடலாம். சதுரமாகவோ செவ்வகமாகவோ இந்த மூடி இருந்தால் நுழைவாயிலில் பொருத்தும்போது கோணம் சற்று மாறினால் கூட உள்ளே தவறி விழுந்து விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். நீங்களே சற்று யோசித்துப் பாருங்கள். எளிதாகப் புரியும்.
     -ரொசிட்டா
    அடுத்த வாரக் கேள்வி
     சின்னஞ் சிறிய மீன்கள் பெரும்கூட்டமாக வந்து, ஒரே ஒழுங்கில் சட்டென்று வேறு திசைக்கு
     அதே ஒழுங்கில் திரும்பிச் செல்கின்றன. இதைப் பார்க்கவே அழகாக, ஆச்சரியமாக இருக்கும்.
     இந்த ஆச்சரியம் எப்படி நிகழ்கிறது?
     பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai