சுடச்சுட

  
  8

   அன்னைக்கு உதவிடவே
   அங்காடி சென்றிடலாம்!
   பண்ணைக் காய்கறிகள்
   பலசரக்கும் வாங்கிடலாம்!
   
   வெண்ணை பெற தயிரை
   விரல் உரச கடைந்திடலாம்!
   சன்னல் கதவனைத்தும்
   சுத்தம் பெற துடைத்திடலாம்!
   
   வண்ணத்துணி பலவும்
   வாளியிலே நனைத்திடலாம்!
   பின்னர் துவைத்தவுடன்
   பிரித்ததனை உலர்த்திடலாம்!
   
   உண்ணப் பரிமாற
   உதவி விட்டு உண்டபின்...,
   கிண்ணம் தட்டனைத்தும்
   உடன் கழுவி வைத்திடலாம்!
   இன்னும் பணிச்சுமையை
   இயன்றவரை குறைத்திடலாம்!
   அன்னைக்குப் பணி செய்து
   ஆனந்தம் பெருக்கிடலாம்!
   
   -செங்கை ரயிலடியான்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai