சுடச்சுட

  
  13

  அம்மா தினமும் நாட்காட்டியில் தேதிகளைக் கிழித்துப் போடுவதை பிரவீண் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் வீட்டில் பழைய நாட்காட்டிகள், மாத நாட்காட்டிகள் நிறைய இருந்தன. பிரவீண் கணக்குப் போடுவதில் மிகவும் திறமைசாலி. எனவே பழைய நாட்காட்டிகளை வைத்து ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தான். அவனுக்கு ஒரு உண்மை புலப்பட்டது. எல்லா காலண்டர்களும் அடிப்படையாக 27 கணிதச் சமன்பாடுகளைக் கொண்டே உருவாக்கப்படுகின்றன என்பதுதான் அது!
   பிரவீண்குமார் உடனே செயலில் இறங்கினான். அடுத்த பத்து ஆண்டுகளுக்கான நாட்காட்டிகளை உடனே உருவாக்கினான். அந்த நாட்காட்டிகளைச் சரிபார்த்த பொழுது, அவை மிகவும் துல்லியமாக இருந்தன. 13 வயதே ஆன பிரவீண்குமாரின் தயாரிப்பு அனைவரையும் ஈர்த்தது. அவர் இத்துடன் நில்லாமல் 10,000 ஆண்டுகளுக்கான காலண்டர்களை உருவாக்கி வைத்தார். இந்த அதிசய நாட்காட்டி தற்போது சிங்கப்பூரிலுள்ள அறிவியல் மையத்தில் (SCIENCE CENTRE-SINGAPORE) மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
   4-5-1989 அன்று பிறந்த பிரவீண் குமார் கோரகவி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் தனது 15ஆவது வயதில் செயற்கைக் கால் ஒன்றை உருவாக்கினார். மிகவும் இலகுவான இந்த செயற்கைக் கால் எளிதாக நீட்டி மடக்கவும் தரமானதாகவும் இருந்தது. அதன் எடை 1.5 கிலோ கிராம் மட்டுமே இருந்தது. இதை அணிபவர் மணிக்கு 20கி.மீ. வேகத்தில் எளிதாக ஓட முடியும்! தனது இந்த அரிய கண்டுபிடிப்பு அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்று விரும்பிய பிரவீண் குமார், ""விகலாங்குல கோ.ஆபரேடிவ் கார்ப்பொரேஷன்'' என்னும் ஆந்திர மாநில அரசின் துறையிடம் தனது கண்டுபிடிப்பை ஒப்படைத்தார். இதனால் ஆந்திர அரசு 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் "யுகாதி கெளரவ் புரஸ்கார்' என்னும் விருதை வழங்கி கெளரவித்தது.
   மேலும் மிகக் குறைந்த செலவில் கடல் நீரைக் குடிநீராக்கும் அமைப்பையும், உணவைப் பதப்படுத்தும் நவீன முறை ஒன்றையும் கண்டறிந்தார். இம்முறையைப் பயன்படுத்திப் பதப்படுத்தப்படும் உணவு மூன்று ஆண்டுகளுக்குக் கெட்டுப் போகாமல் இருந்தது. உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் இம்முறையைப் பயன்படுத்துவதால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்க்கலாம். இந்த அரிய கண்டுபிடிப்புகளால் இவருக்கு ஆந்திர பிரதேச அரசின் FAPCCI என்னும் அமைப்பு, 2009}10 ஆண்டிற்கான "தலை சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பு' என்னும் விருதை வழங்கியது.
   கண்பார்வை அற்றோருக்குப் பயன்படும் "பிரெய்லி பிரிண்டர்' ஒன்றை இவர் கண்டுபிடித்துள்ளார். தற்பொழுது சந்தையில் உபயோகத்திலிருக்கும் பிரிண்டர்களை விட இது விலை குறைவாகவும், தரமாகவும் இருக்கிறது. இதனால் 2004ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு "பால்ஸ்ரீ' என்னும் உயர்ந்த விருதை இவருக்கு வழங்கி கெளரவித்தது.
   இவர் ஒரு நவீன செயற்கைக் கோளின் மாதிரி ஒன்றை வடிவமைத்து, அதற்கு ஒப்புதல் பெற்றால் நிலநடுக்கம் ஏற்படப் போவதை 24மணி நேரம் முன்னதாகவே நாம் அறிந்து கொள்ள முடியும். இவர் மேலும் பல்வேறு கண்டுபிடிப்புகளைப் படைத்துள்ளார். அவை அன்றாட வாழ்வில் மக்களுக்கு அதிக அளவில் பயன்தரக் கூடியவையாக வடிவமைத்துள்ளார்.
   அவற்றுள் மிக முக்கியமான 16பொருட்கள் காப்புரிமம் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவர் தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து புதிய புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்வதே தன் நோக்கம் என்று கூறுகிறார். இவர் "தாமஸ் ஆல்வா எடிசனை'த் தன் முன்னோடியாகக் கருதுகிறார்!
   
   இளைய பாரதத்தினாய் வா! வா! வா!
   எதிரிலா வளத்தினாய் வா! வா! வா!
   
   தொகுப்பு: என்.லக்ஷ்மி பாலசுப்ரமணியன், கடுவெளி.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai