சுடச்சுட

    
    15

    * ""சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணின்னு எழுதியிருக்கே? ஆடி என்ன ஆச்சு?''
     ""ஆடித் தள்ளுபடி சார்''
     பர்வதவர்த்தினி,
     வீரராகவன் தெரு,
     அண்ணாநகர்,
     பம்மல்,
     சென்னை-600075.
     
    * ""தொப்பியை காலிலும் செருப்பை தலையிலும் மாட்டுறியே ஏண்டா?''
     ""சந்தோஷத்திலே தலைகால் புரியலே''
     எஸ்.டேனியல் ஜூலியட்,
     தாதன்குளம்.
     
    * ""நீங்க ஒரு பல்
     டாக்டரா?''
     ""இல்லியே...,முப்பத்திரெண்டு பல்லுக்கும் நான்தான் டாக்டர்''
     உ.அமீரா அலிமா,
     கடையநல்லூர்.
     
    * ""என்னம்மா இது? அஞ்சறைப் பெட்டிங்கறே....அஞ்சுதானே இருக்கு...அரைப் பெட்டியைக் காணோம்மா...''
     ""???????''
     ச.முத்துராமலிங்கம்,
     பிரம்மதேசம்.
     
    * ""சந்தியா, சாக்லேட் நிறைய சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி வரும்... அதை கீழே போடு''
     ""கீழே போட்டா எறும்பு வரும் தாத்தா''
     வளர்மதிமுத்து,
     திருச்சிற்றம்பலம்.
     
    * ""என்னடா உன்னோட ரிஸ்ட் வாட்ச் நின்னுபோய்க் கிடக்கு?''
     ""நேரத்தை வீணாக்கக் கூடாதுன்னு நான்தான் நிறுத்தி வெச்சேன்''
     க.சங்கர்,
     48, ஜவஹர் வீதி,
     நாகர்பாளையம்,
     கோபிசெட்டிபாளையம், ஈரோடு.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai