சுடச்சுட

    
    11

    அரங்கம்
     காட்சி-1
     
     இடம்: வீடு
     மாந்தர்: சித்ரா மற்றும் சித்ராவின் தாயார்
     
     சித்ரா: அம்மா, நம்ம ஊர்ல புத்தக கண்காட்சி வந்து இருக்கிறது அம்மா. இன்று மாலை என்னை புத்தக கண்காட்சிக்கு அழைத்துச் செல்லுங்கள் அம்மா.
     அம்மா: சரி, அழைத்துச் செல்லுகிறேன். எங்கே நடக்கிறது?
     சித்ரா: எங்கள் பள்ளிக்கு அருகில் உள்ள திடலில் புத்தக கண்காட்சி நடக்கிறது அம்மா.
     அம்மா: அழைத்துச் செல்கிறேன். ஆனால் இப்பொழுது நமது வீடு இருக்கும் நிலை உனக்கு தெரியும். அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லாததினால் ஆறு மாதங்களாக வேலைக்குச் செல்ல வில்லை. எனவே உனக்கு புத்தகங்களை வாங்கிக் கொடுக்க பணம் இல்லையே..., என்ன செய்வது? (அம்மா கண்கலங்குகிறாள்)
     சித்ரா: அம்மா, எனக்கு புத்தகங்களை நீங்கள் இப்பொழுதே வாங்கி தரவேண்டாம். அப்பா உடல்நிலை சரியாகி வேலைக்கு சென்றவுடன் வாங்கிக்கொள்ளலாம். ஆனால் நான் இப்பொழுது புத்தக கண்காட்சிக்கு சென்று
     என்னவிதமாக புத்தகங்கள் உள்ளன. அவற்றின் பெயர்கள், அவற்றின் எழுத்தாளர் பெயர்களை அறிந்துகொள்ள விரும்புகிறேன். (நீங்கள் கலங்காதீர்கள். கண்களை துடைத்துவிடுகிறாள்)
     
     காட்சி-2
     
     இடம்: புத்தக கண்காட்சி
     மாந்தர்: சித்ரா, சித்ராவின் தாயார், சித்ராவின் ஆசிரியர் மஞ்சு.
     
     (சித்ரா ஒவ்வொரு புத்தக ஸ்டாலாக சென்று அங்குள்ள தனக்கு பிடித்த புத்தகங்களைப் பார்த்து அவற்றின் பெயர் மற்றும் புத்தக ஆசிரியரின் பெயரை குறிப்பெடுத்துக்கொள்கிறாள்)
     அப்பொழுது அவளின் வகுப்பாசிரியர் மஞ்சுவை பார்க்கிறாள்.
     சித்ரா: வணக்கம் டீச்சர்.
     ஆசிரியர் மஞ்சு: வணக்கம் சித்ரா. நல்லது. அம்மா கூட வந்திருக்கியா?
     சித்ரா: ஆமாம் டீச்சர். புத்தகங்களை பார்க்க பார்க்க ஆசையாக உள்ளது. எவ்வளவு புத்தகங்கள். எல்லாம் ஒரே இடத்தில்!
     அம்மா: டீச்சர், சித்ராவிற்கு புத்தகங்கள் என்றால் உயிர். நிறைய படிக்கணும் என்று ஆசைப்படுவாள். அதான் அழைத்து வந்தேன்.
     ஆசிரியர் மஞ்சு: புத்தகங்கள் படிப்பது மிக நல்ல பழக்கம். அது என்ன கையில்? ஏதோ குறிப்பு எழுதி வைத்திருக்கிறாய்..., கொடு பார்க்கலாம்.
     சித்ரா: இது...., நான் எந்த எந்த புத்தகங்களை வாங்க வேண்டும் என்று குறிப்பு எழுதி வைத்திருக்கிறேன் டீச்சர். இந்தாருங்கள்.
     ஆசிரியர் மஞ்சு: (குறிப்பை படித்து பார்க்கிறாள்) அருமை! இது எல்லாம் உங்களைப் போன்ற மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள். மிக அருமை!
     அம்மா: படிக்கணும் என்று ஆர்வம் இருக்கு..., ஆனால் எங்களிடம் வசதி இல்லையே டீச்சர்....., இவ்வளவு புத்தகங்களை நாங்கள் எப்படி வாங்கி தரமுடியும்?
     ஆசிரியர் மஞ்சு: கவலைப்படதீர்கள் அம்மா. நான் இதற்கு ஒரு வழி செய்கிறேன். நாளை சந்திப்போம். வருகிறேன்.
     
     சித்ரா: நன்றி டீச்சர்.
     
     காட்சி-3
     
     இடம் : வகுப்பறை
     மாந்தர்: ஆசிரியர் மஞ்சு, சித்ரா மற்றும் மாணவிகள் சிந்து, மற்றும் கமலா.
     
     ஆசிரியர் மஞ்சு : நேற்று புத்தக கண்காட்சிக்கு யாரெல்லாம் சென்றீர்கள்?
     
     (ஐந்து மாணவிகளை தவிர எல்லாரும் சென்று வந்ததாக கூறினார்கள். அந்த ஐந்து மாணவிகளும் இன்றும் புத்தக கண்காட்சிக்கு செல்லப்போவதாக கூறினார்கள்.)
     
     ஆசிரியர் மஞ்சு: நல்லது. நேற்று நமது வகுப்பு மாணவிகள் பெரும்பாலானவர்கள் புத்தக கண்காட்சிக்கு சென்று வந்துள்ளீர்கள். புத்தகங்களை வாங்கி இருக்கிறீர்களா?
     மாணவிகள்: (பெரும்பாலும் கோரஸாக கூறினார்கள்) வாங்கி இருக்கிறோம்.
     ஆசிரியர் மஞ்சு: நல்லது. இன்று முதல் நமது வகுப்பில் சிறிய நூலகம் அமைக்கப் போகிறோம்.
     மாணவிகள்: என்னது நூலகமா? ஐயா! ஜாலி...ஜாலி!
     ஆசிரியர் மஞ்சு: இந்த நூலகத்திற்கு நான் இப்பொழுது ஒரு 150 புத்தகங்களை பரிசளிக்கிறேன். இந்த புத்தகங்களை தேர்வு செய்தது யார் தெரியுமா?
     மாணவிகள்: யாராக இருக்கும்?....,நமது வகுப்பிலா?........யார் யாரது?
     ஆசிரியர் மஞ்சு: நமது வகுப்பில் உள்ள உங்களின் தோழி சித்ரா தான்! நேற்று அவளை புத்தகக் கண்காட்சியில் அவளின் தாயாருடன் பார்த்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை அவள் குறிப்பெடுத்து வைத்திருந்தாள். அவள் குறிப்பெழுதிய புத்தகங்கள் தான் நமது நூலகத்தில் இடம் பெற உள்ளன.
     
     (மாணவிகள் சித்ராவிற்கு பாராட்டு தெரிவிக்கிறார்கள்.)
     
     சித்ரா: டீச்சர் மிக்க நன்றி. நான் குறிப்பெழுதிய புத்தகங்களை வாங்கியதுடன் எங்களுக்காக ஒரு வகுப்பறை நூலகத்தை ஏற்படுத்தி கொடுத்தததற்கு.
     ஆசிரியர் மஞ்சு: நமது நூலகம் மதிய உணவு இடைவேளையில் செயல்படும். அதாவது நீங்கள் மதிய உணவு உண்டபின் உள்ள ஓய்வு நேரத்தை நூலகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
     சித்ரா: ஒரு சிறு வேண்டுகோள்.
     ஆசிரியர் மஞ்சு: சொல்லு சித்ரா.
     சித்ரா: புத்தகங்களை எங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் வீட்டிற்கு கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
     ஆசிரியர் மஞ்சு: மிகச்சிறந்த யோசனை! அப்படியே செய்யலாம். வகுப்பறை புத்தக நிர்வாகத்தை உன்னிடம் ஒப்படைக்கிறேன்.
     சித்ரா: மேலும் ஒரு சிறு வேண்டுகோள்.
     ஆசிரியர் மஞ்சு: சொல் சித்ரா.
     சித்ரா: வாரம் ஒரு முறை நாங்கள் படிக்கும் புத்தகங்களைப் பற்றி நாங்கள் ஒரு கட்டுரை எழுதும் வாய்ப்பளிக்குமாறு வேண்டுகிறேன்.
     ஆசிரியர் மஞ்சு: "ஐடியா சித்ரா' என்று பட்டம் கொடுக்கலாம் போல இருக்கே? மாணவிகள் அனைவருக்கும் இந்த ஐடியா ஓ.கே.வா?
     மாணவிகள்: (கோரஸாக) ஓ.கே.டீச்சர்!
     
     (மாணவிகளுக்குள் சிறு சல சலப்பு வகுப்பு தலைவி சிந்து எழுந்திருக்கிறாள்)
     
     சிந்து: டீச்சர்! மாணவிகள் அனைவரின் சார்பாக நான் ஒன்று செல்லலாமா?
     ஆசிரியர் மஞ்சு: சொல்லும்மா சிந்து.
     சிந்து: மாணவிகள் பலர் தங்கள் புத்தகங்களையும் நமது வகுப்பறை நூலகத்திற்கு தர விரும்புகிறார்கள்.
     ஆசிரியர் மஞ்சு: மிக்க மகிழ்ச்சி. அதனை நான் வரவேற்கிறேன். (ஆசிரியர் கைதட்டி தனது மகிழ்ச்சியை தெரிவிக்கிறார்).
     சிந்து: நமது வகுப்பறை நூலகம் பற்றி சில வரிகள் கமலா சொல்ல விரும்புகிறாள்
     டீச்சர்.
     ஆசிரியர் மஞ்சு: தாராளமாக சொல் கமலா.
     கமலா: சிறு விதை விதைக்கப்பட்டது!
     சிறு நூலகமாக..., விண்வெளி பயணத்தின் முதல் அடி போல...,எங்கள் பயணத்தின் முதல் படி நூலகமாய்...!
     
     (மாணவிகளின் மகிழ்ச்சியான ஆரவாரத்துடன் அந்த பீரியட் முடிகிறது. ஆசிரியர் வெளியே செல்கிறார்.)
     திரை
    ஹேமப்ரியன்
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai