சுடச்சுட

  
  1

  அமைதி மலர வேண்டும்!
   எழுத்தாளர் ஹெலன் கெல்லரால் பார்க்கவும் கேட்கவும் முடியாது. அவரை சந்திக்க ஒருவர் வந்தார். ஹெலன் கெல்லரிடம், ""உங்களுக்கு மிகவும் விருப்பமான ஒன்று தரப்படுகிறது என்றால் அது என்னவாக இருக்க வேண்டும்?'' என்று கேட்டார்.
   கேள்வி கேட்டவரோ பார்க்கும் திறனும், கேட்கும் திறனும் தனக்குத் தேவை என்று ஹெலன் கெல்லர் சொல்வார் என்று எதிர்பார்த்தார். ஆனால் ஹெலன் கெல்லரோ, ""இந்த உலகத்தில் அமைதி மலர வேண்டும் என்று கேட்பேன்''என பதில் சொன்னார்.
   ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
   
  சிரிப்பு!
   விஞ்ஞானி ஐன்ஸ்டீன் நன்றாக வயலின் வாசிக்கும் திறமை உடையவர். ஒருமுறை தனது நண்பர்களுக்கிடையில் வயலின் வாசித்தார். ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த நகைச்சுவை நடிகரான மோல்நார் ஐன்ஸ்டீன் வயலின் வாசித்துக் கொண்டிருந்தபோது சிரித்துக் கொண்டிருந்தார்! அதைக் கண்ட ஐன்ஸ்டீன், ""நான் வயலின் இசைக்கும்போது நீங்கள் சிரிக்கிறீர்கள்...,ஏன் இப்படி?...நீங்கள் நகைச்சுவை வேடத்தில் நடிக்கும்போது நான் எப்போதாவது சிரித்தது உண்டா?'' என்றாரே பார்க்கலாம்!
   அ.ராஜாரஹ்மான், கம்பம்.
   
  "பிஞ்சு' வந்தது!
   தமிழறிஞர் கி.வா.ஜ., ஒருமுறை மும்பை சென்றிருந்தார். அப்போது சிலர் அவரைக் காண வந்திருந்தனர். அவர்கள் நன்கு கனிந்த வாழைப்பழச் சீப்பு ஒன்றை அவர் முன் வைத்து வணங்கினர். கி.வா.ஜ. தங்கியிருந்த வீட்டுக் குழந்தை அந்தப் பழச்சீப்பிலிருந்து பழங்களை இழுத்தது. இரண்டு பழங்கள் பிய்ந்து வந்தன. வீட்டுக்காரர் குழந்தையைக் கோபித்துக் கொண்டார். அப்போது கி.வா.ஜ, ""பழத்தில் இரண்டு பிஞ்சு வந்து விட்டன என்று கோபிக்காதீர்கள்...,பிஞ்சு எடுத்தது..,பிஞ்சு வந்தது'' என்றார்.
   நஜிமா பேகம்,
   டி.ஆர்.பட்டினம்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai