சுடச்சுட

  
  3

  *விநாடி வினா-விடை
   ஆசிரியர்: வாண்டு மாமா
   பக்கம்: 272 ; விலை: ரூ.275
   கதைப் புதிர்கள், படப் புதிர்கள், கணக்குப் புதிர்கள் என 450க்கும் மேற்பட்ட புதிர்கள் அடங்கிய நூல். பல புதிர்கள் மாணவமணிகளின் ஞாபக சக்திக்கும், சிந்தனைக் கூர்மைக்கும் சவாலாக அமைந்துள்ளன. புதிர் விளையாட்டுகளில் விடை எண் 39 முதல் 82வரை விடைகள் இடம்மாறியுள்ளன. அடுத்த பதிப்பில் சரிசெய்வார்கள் என நம்புகிறோம். (வெளியீடு: தனலெட்சுமி பதிப்பகம், எஸ்-17, அரவிந்த் நரேன் என்கிளேவ், 8,மாசிலாமணி தெரு, தியாகராய நகர், சென்னை-17, போன்: 044-2436 4243).
   
  * அழகிய பூனை
   ஆசிரியர்-மூலம்: வண்ட கக்;
   தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ
   பக்கம்: 32 ; விலை: ரூ.30
  தனிமையில் வசிக்கும் தாத்தாவும் பாட்டியும் துணைக்கு ஒரு பூனை வளர்க்க ஆசைப்படுகிறார்கள். அழகிய பூனையை தேடிச் செல்லும் தாத்தா, கோடிக்கணக்கான பூனைகளை வீட்டுக்கு அழைத்து வருகிறார். அவற்றிலிருந்து ஒரு பூனையை எவ்வாறு தேர்வு செய்தார்கள் என்பதை சுவாரஸ்யமாக விளக்கும் கதை. கூடவே, ஆங்கில மூலமும் தரப்பட்டுள்ளது. (வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18, போன்: 044-2433 2424).
   
  * குட்டி பாப்பாவின் சேமிப்பு
   (சிறுவர் கதைகள்)
   ஆசிரியர்: வெண்ணிலா
   பக்கம்: 80 ; விலை: ரூ.80.
  குட்டி பாப்பாவின் சேமிப்பு, நன்றியும் மன்னிப்பும் சொல்லும் நாள், சீனுவை மாற்றிய வார்த்தை, விலங்குகளைக் கண்டால்... முதலான 36 கதைகள். அனைத்தும் குட்டி கதைகள். நீதி சொல்லும் கதைகள். (வெளியீடு: ஏ.கே.எஸ். புக்ஸ் வேர்ல்டு, 8,(ப.எண்:38பி), சீனிவாசன் தெரு, தியாகராய நகர், சென்னை-17, போன்: 044-2435 1872).
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai