சுடச்சுட

  
  12

   1. ஆடி, ஆடி நடப்பான்... அகிலம் அதிர நடப்பான்... இவன் யார்?
   2. ஆவணி பிறப்பது எதனாலே? நடனம் முடிவது எதனாலே?
   3. ஆண்டுதோறும் வரும் வரி... அடுத்தடுத்து வரும் வரி... இவை என்ன?
   4. உயிரோடு இருந்தால் சிவப்பு... இறந்துவிட்டால் கருப்பு... இவன் யார்?
   5. முப்பத்து இரண்டு காவலாளிகள்... நடுவிலே ஒரு வாயாடிப் பெண்...
   6. மூடாத தொட்டியில் எடுக்க எடுக்க நீர்.... இது என்ன?
   7. நாக்கு இல்லாதவன், நல்லது சொல்லுவான்...
   இவன் யார்?
   8. போன ரயில் திரும்ப வராது... இது என்ன?
   9. பரந்த காட்டேரிக்கு பக்கமெல்லாம் சடை...
   இது என்ன?
   10. ஒற்றைக் கால் மனிதனுக்கு எட்டுக் கை...
   இவன் யார்?
   விடைகள்:
   1. யானை
   2. ஆடி முடிவதால்
   3. ஜனவரி, பிப்ரவரி
   4. நெருப்பு
   5. பற்கள், நாக்கு
   6. கிணறு
   7. புத்தகம்
   8. உயிர்
   9. ஆலமரம்
   10. குடை
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai