சுடச்சுட

    
    15

    கேள்வி: சின்னஞ் சிறிய மீன்கள் பெரும்கூட்டமாக வந்து, ஒரே ஒழுங்கில் சட்டென்று வேறு திசைக்கு அதே ஒழுங்கில் திரும்பிச் செல்கின்றன. இதைப் பார்க்கவே அழகாக, ஆச்சரியமாக இருக்கும். இந்த ஆச்சரியம் எப்படி நிகழ்கிறது?
     பதில்: கடலில் பல வகை மீன் இனங்கள் உள்ளன. சின்னஞ் சிறியவை, சற்றே பெரியவை, மிகப் பெரியவை, பிரமாண்டமானவை என்ற பலவித சைஸ்களில் கடல் வாழ் உயிரினங்கள் இருக்கின்றன. இவை அத்தனையுமே பார்ப்பதற்கு அழகாகவும், விநோதமாகவும், வித்தியாசமாகவும், விசித்திர பழக்க வழக்கங்களைக் கொண்டவையாகவும் இருக்கின்றன.
     இவைகள் குடும்பம் குடும்பமாக வசித்தாலும், பெரிய மீன்கள் அதிக கூட்டம் சேர்த்துக் கொள்வதில்லை. பெரும்பாலான சமயங்களில் தனியாகவே சுற்றித் திரியும், தனியாகவே இரை தேடும்.
     ஆனால் மிகச் சிறிய மீனினங்கள்தான் பெருங்கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு, எப்போதும் ஒன்றாகவே அலைகின்றன. இத்தகைய கூட்டத்திற்கு ஆங்கிலத்தில் "ஷோல்' (நட்ர்ஹப்) என்று பெயர்.
     இந்த மீன் கூட்டத்தின் நீச்சலை சற்றே கவனமாகப் பார்த்தால், அதில் ஒரு மிலிட்டரி ஒழுங்கு தென்படும். போர் வீரர்களைப் போலத் தங்கள் தலைகளை ஒரே நேர்கோட்டில் வைத்துக்கொண்டு நீச்சல் அடிப்பதைப் பார்ப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சில சமயங்களில் கூட்டத்திலுள்ள எல்லா மீன்களுமே, பக்கவாட்டில் வரும் மீனின் மார்புக்கு அருகில் தனது தலை இருக்குமாறு வைத்துக்கொண்டு நீந்தும்.
     எப்படி நீந்தினாலும் மொத்தக் கூட்டமும் மிக அழகான அணிவகுப்பில், கட்டுப்பாடு மாறாமால் சட் சட்டென்று திசை மாறிச் செல்வது மிகப் பெரிய ஆச்சரியம்தான்!
     இந்த ஒழுங்கிற்கு ஒரே காரணம்தான். கணிப்பொறி எப்படி வேலை செய்கிறது? எல்லா கணிப் பொறிகளும் ஒரே ஒழுங்கில் தங்கள் பணியைச் செய்கின்றன அல்லவா? இதற்கான கட்டமைப்பை ஒருவர் வடிவமைத்து நமக்குத் தந்திருக்கிறார் அல்லவா? அதோ போலத்தான் ஒவ்வொரு மீனுக்கும் ஒரு ஒழுங்கை இறைவன் வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். ஆகவே, எல்லா மீன்களும் ஒன்று போல செயல்படுகின்றன. அதனால்தான் எவ்வளவு பெரிய கூட்டமானாலும் ஒரே ஒழுங்கில் நீந்துகின்றன.
     -ரொசிட்டா
    அடுத்த வாரக் கேள்வி
     வேறு குரூப் ரத்தம் கொடுத்தால், மனித உடல் ஏற்றுக்கொள்வதில்லை. இதனால் உயிரிழப்புகூட நேரிடுகிறது. ஆனால் கொசுக்கள் மட்டும் பல மனிதர்களின் பலவகை குரூப் இரத்தங்களைக் குடித்தும் எப்படி பாதிப்படையாமல் இருக்கின்றன.?
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai