சுடச்சுட

    
    16

    * என்னடா உன்னோட ஹோம் ஒர்க்கை நீ பண்ணாம அறிவழகன்கிட்ட கொடுத்து பண்ணி இருக்கே?
     நீங்கதானே "அறிவு'க்கு வேலை கொடுக்க சொன்னீங்க சார்!
     ஜோ.ஜெயக்குமார்,
     நாட்டரசன்கோட்டை.
     
    * நினைச்சது ஒண்ணு... நடந்தது ஒண்ணு...
     அட... ரெண்டும் ஒண்ணுதானே.. இதுக்கு ஏன் கவலைப்படுறீங்க?
     எம்.அசோக்ராஜா,
     3/14 அ,
     அரவக்குறிச்சிப்பட்டி.,
     அசூர்,
     திருச்சி - 620015.
     
    * அம்மா: பரீட்சை எழுதப் போறதுக்கு முன்னாடி ஆத்தங்கரை பிள்ளையாரைச் சுத்தச் சொன்னேனே... சுத்தினியா...?
     மகன்: இல்லம்மா... சுத்துறதுக்காக அசைச்சுப் பார்த்தேன், ஆனா, முடியலம்மா..!
     எஸ்.ஏ.பரீரா தஸ்கீன்,
     குடியாத்தம்.
     
    * உங்க முகத்தை நான் பல இடங்களில் பார்த்துள்ளேன்.
     இருக்காதே. என் முகம் எப்பவும் என்
     கூடத்தான் இருக்கும்.
     ஜோ.ஜெயக்குமார்,
     நாட்டரசன்கோட்டை.
     
    * மீனு: எங்க வீட்ல எங்கம்மா "சிங்கர்' எங்கப்பா "சிங்கர்' எங்க அக்காவும் "சிங்கர்' தெரியுமா?
     சோனு: ப்பூ இது என்ன பிரமாதம். எங்க வீட்ல தையல் மிஷின்கூட "சிங்கர்'தான் தெரியுமா?
     இளன், சென்னை.
     
    * ""நான் ஒரு "வாஸ்து நிபுணர்' ஆகணும்னு மனக்கோட்டை கட்டினேன்.. ஆனா நடக்கலை..''
     ""அப்படினா அந்த மனக்கோட்டையை வாஸ்துபடி கட்டியிருக்க மாட்டீங்க...!''
     க.சங்கர்,
     48, ஜவஹர் வீதி, நாகர்பாளையம்,
     கோபிசெட்டிபாளையம்,
     ஈரோடு மாவட்டம், பின்கோடு : 638452..
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai