சுடச்சுட

  
  1

  பில்!
   பெர்னாட்ஷா தம் மருத்துவருக்குத் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்தார். ""இதய வலியால் துன்பப்படுகிறேன். கை, கால்களைக்கூட அசைக்க முடியவில்லை. அதனால் தாங்கள் உடனே வரவேண்டும்'' என்றார்.
   சிறிது நேரம் சென்று வந்த மருத்துவர், ""லிப்ட் ரிப்பேர்..., இத்தனை மாடி ஏறி வந்ததால் இதயம் துடிக்கிறது.....,மயக்கமாக வருகிறது!'' என்று சொல்லி "டை'யைத் தளர்த்தியபடி சோபாவில் சாய்ந்தார்.
   பதறிப்போன ஷா எழுந்து காப்பி தயாரித்தார். படபடப்பாக ஆஸ்பிரின் மாத்திரையைத் தேடி எடுத்து வந்து கொடுத்தார்.
   மருத்துவர் பளிச்சென்று பேனாவை எடுத்து ஒரு சீட்டில் ஏதோ எழுதி ஷாவிடம் நீட்டினார். ஷா திகைத்தார். ""உங்களைக் குணமாக்கியதற்கு பில்'' என்றார் மருத்துவர்!
   ந.இராஜேஸ்வரி, பட்டீச்சுரம்.
   
  உழைத்த கூலி!
   ரயில்வே ஸ்டேஷன் பிளாட்ஃபாரத்தில் சென்ற ஒரு பெரியவரை அழைத்து, "அய்யா, என் கணவர் ஹோட்டலுக்குப் போயிருக்கிறார். ரயில் புறப்படப் போகிறது. அவரை அழைத்து வந்தால் கூலி தருகிறேன்' என்று கணவனின் அடையாளங்களைச் சொன்னாள், ஒரு இளம்பெண். பெரியவரும் அக்கறையாகத் தேடிப் பிடித்து கணவனை அழைத்து வந்து, பேசியபடி கூலியையும் பெற்றுக் கொண்டார். அப்போது அங்கு வந்த ஒருவர் பெரியவரை வணங்கிப் பேசியபோது அவர்தான் ரஷ்ய தத்துவஞானி டால்ஸ்டாய் என்பது அந்தப் பெண்ணுக்குத் தெரிந்தது. "பெரிய தவறு செய்துவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்' என்றாள். "பரவாயில்லைம்மா. அதற்காக கூலியைத் திருப்பிக் கேட்டுவிடாதே. அது நான் உழைத்துச் சம்பாதித்தது' என்றார், டால்ஸ்டாய் சிரித்துக்கொண்டே.!
   மல்லிகா அன்பழகன், சென்னை.
   
  வண்டியோட்டி!
   நீக்ரோக்களின் தலைவரான புக்கர் வாஷிங்டன் தென் கரோலினா மாகாணத்தில் சொற்பொழிவு செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அங்கிருந்த ஒரு குதிரை வண்டிக்காரனிடம் விலாசத்தை நீட்டி, ""இந்த இடத்திற்குச் செல்ல வேண்டும்'' என்றார்.
   குதிரை வண்டிக்காரனோ, ""நான் நீக்ரோக்களுக்கு வண்டி ஓட்டுவதில்லை'' என்று வர மறுத்தான். ""சரி! நான் உனக்கு வண்டு ஓட்டுகிறேன்'' என்று கூறி குதிரை வண்டிக்காரனை உள்ளே உட்கார வைத்து தான் வெளியே அமர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டு சொற்பொழிவு ஆற்றும் இடத்திற்கு விரைந்தார்!
   அ.ராஜாரஹ்மான். கம்பம்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai