சுடச்சுட

    
    12

    பொறுமையின் பரிசு
     ஆசிரியர்: கவிஞர் செல்ல கணபதி
     பக்கம்: 96 ; விலை: ரூ.20
     
     தான் படித்ததும் கேட்டதுமான சிறந்த சம்பவங்களை கதை, கருத்து, கவிதை உள்ளடக்கிய அழகிய கட்டுரைகளாக சிறுவர்-சிறுமியர் விரும்பும் வகையில் தொகுத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர். திட்டமிட்டு நேரத்தைச் செலவிடுகிறவர்கள்தான் வெற்றியாளர்களாகப் பவனி வருகிறார்கள் என்பது போன்ற சிறந்த கருத்துகள் பல நிரம்பிய நூல். (வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-14, போன்: 044-2813 2863).
     
     புகழ்பெற்ற மரியாதை ராமன் கதைகள்
     ஆசிரியர்: எஸ்.தமயந்தி
     பக்கம்: 140 ; விலை: ரூ.50
     
     சாதாரண குடிமகனாக இருந்து நீதிபதி என்னும் உயர்ந்த பதவியை அடைந்த மரியாதை ராமன், விசித்திரமான பல வழக்குகளில் சாதுர்யமாக வழங்கிய தீர்ப்புகள் 22 தலைப்புகளில் சிறுகதைகளாக தொகுத்து தரப்பட்டிருக்கின்றன. பெரியவர்கள் இக்கதைகளைப் படித்து தேவையானவற்றை குழந்தைகளுக்குக் கூறி மகிழலாம். (வெளியீடு: சுவாமிமலை பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை-17, போன்: 044-2431 2559).
     
     அற்புத உயிரினங்கள் அதிசயத் தகவல்கள்
     ஆசிரியர்: ஆர்.வி.பதி
     பக்கம்: 112; விலை: ரூ.35
     
     ஈ, மூட்டைப்பூச்சி, சிலந்தி, காண்டாமிருகம், கங்காரு, வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, டால்பின், பிளாட்டிபஸ் போன்ற 67 வகையான உயிரினங்கள் பற்றிய தகவல்களின் தொகுப்பு... பாலூட்டிகள், பறவைகள், பூச்சிகள், கடல்வாழ் உயிரினங்கள் உள்ளிட்டவை பற்றிய பல அபூர்வ தகவல்கள் வியக்க வைக்கின்றன. (வெளியீடு: குறிஞ்சி, 20, டீச்சர்ஸ் கில்டு காலனி (ராஜாஜி நகர் விரிவு), வில்லிவாக்கம், சென்னை-49, போன்: 044-2650 2086).
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai