சுடச்சுட

  
  13

  1. பொண்ணு குண்டுதான்... ஆனால் உடை பள...பள...பள...பல..
   இவள் யார்?
   2. ஆயிரம் பேர் அயராது உழைத்துக் கட்டிய மண்டபத்தை, ஒருவன் உடைத்தான்.... இது என்ன?
   3. தாகம் தீர்க்காது, கிணற்றில் தங்காது, கைகளால் அள்ள முடியாது, பார்வைக்கு மட்டுமே விருந்து... இது என்ன?
   4. ஓட ஓடக் குறையும் வால்...
   5. கருநீல உருவத்திலிருந்தாலும் சுவைக்கு மட்டும் பஞ்சமில்லை.... இது என்ன?
   6. அலைந்து அலைந்து நுரை தள்ளுவான்... ஆனாலும் அடங்க மாட்டான். இவன் யார்?
   7. ஒரு சிறு தூசி விழுந்தாலும் கலங்கிப் போகும் இந்தக் குளம்... இது என்ன?
   8. பாலம் கட்ட உதவியவன், பார்ப்பதற்கு சிறியவன், பட்டை போட்டிருப்பான் ... இவன் யார்?
   9. அக்கா வரைந்தாள் அழகோவியம்... ஆனால் தாளில் அல்ல... இது என்ன?
   -ரொசிட்டா

  விடைகள்:

  1. வெங்காயம்

  2. தேன்கூடு

  3. கானல் நீர்

  4. ஊசி நூல்

  5. நாவல் பழம்

  6. கடல் அலை

  7. கண்

  8. அணில்

  9. கோலம்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai