தெரிந்து கொள்ளுங்கள்

முதன் முதலில்... கண்மை பூசும் வழக்கத்தை முதன் முதலில் எகிப்தியர்கள்தான் ஏற்படுத்தினர். சூரிய ஒளியில் கண் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் தோன்றியதுதான் கண் மை பூசும் வழக்கம்! தேநீரைக் கண்டுபிடித்தவர
தெரிந்து கொள்ளுங்கள்
முதன் முதலில்...

கண்மை பூசும் வழக்கத்தை முதன் முதலில் எகிப்தியர்கள்தான் ஏற்படுத்தினர். சூரிய ஒளியில் கண் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் தோன்றியதுதான் கண் மை பூசும் வழக்கம்!

தேநீரைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்தான் என்றாலும் முதன் முதலில் அன்றாட வழக்கிற்குக் கொண்டு வந்து பயன்படுத்திய பெருமை இந்தியர்களுக்கும் ஜப்பானியர்களுக்கும்தான்!

பறக்கும் பலூனைக் கொண்டு முதன் முதலில் வான்படையை உருவாக்கிய பெருமை பிரான்ஸ் நாட்டைத்தான் சேரும்.

உலகில் முதன் முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழக அருங்காட்சியகம் என்ற பெருமையை ஆக்ஸ்ஃபோர்ட் ஆஷ்மோலியன் அருங்காட்சியகம் பெறுகிறது. 1683-ம் ஆண்டு இந்த மியூசியம் தொடங்கப்பட்டது.

இரும்பு மற்றும் எலும்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட குண்டூசிகளை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் சுமேரியர்கள்.

கலங்கரை விளக்கம் முதன் முதலில் கி.மு. 500-ல் எகிப்தியர்களால் அமைக்கப்பட்டது.

முதன் முதலில் பச்சை சிவப்பு விளக்குகளைக் கொண்டு டிராஃபிக் சிக்னல் 1868-ம் ஆண்டு லண்டனில் ஏற்படுத்தப்பட்டது.

இந்தியாவின் முதல் தொலைபேசித் தொடர்பகம் 1851-ம் ஆண்டு கல்கத்தாவில் நிறுவப்பட்டது.

டாங்கு என்றழைக்கப்படும் போர் ஊர்தி முதன் முதலில் இங்கிலாந்தில் 1916-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

முகச்சவரம் செய்து கொள்ளும் முறையை முதன் முதலில் ஏற்படுத்தியவர் மாவீரன் அலெக்ஸôண்டர்.

கிளி ஜோசியம் முதன் முதலில் தோன்றியது பர்மாவில்தான்.

விவசாயம் முதன் முதலில் தொடங்கியது தாய்லாந்து நாட்டில்தான்!

நெ.இராமன், சென்னை.

ஜாவா அரிசி!

தமிழகத்தில் 1943-ல்தான் ஜவ்வரிசி இறக்குமதியானது! ஜாவா தீவுகளில் இருந்து வந்ததால், ஜாவா அரிசி என்று வழங்கப்பட்டது. பின்னர் இது ஜவ்வரிசியாக சுருங்கிவிட்டது!

விமான விபத்து எப்படி நடந்தது என்று கண்டுபிடிக்கும் பெட்டிதான் கருப்புப் பெட்டி. இதைக் கண்டுபிடித்தவர் டேவிட் வாரன். இவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்.

இதயம் 60 விநாடிக்கு 72 முறை துடிக்கும். அப்படியென்றால் 15 விநாடிகளுக்கு 18 முறை துடிக்க வேண்டும். எனவேதான் நமது மணிக்கட்டின் (நாடி) நரம்புத் துடிப்பை வைத்து இதயத் துடிப்பை மருத்துவர்கள் அளந்து பார்க்கிறார்கள்.

ஐ.நா. சபை சின்னத்தில் பூமி உருண்டையுடன் உள்ள இலை ஆலிவ் இலை.

-சு.இலக்குமணசுவாமி, திருநகர்.

முதன்முதலாக...

இந்தியாவில் முதன்முதலாக அஸ்ஸôமில் 1867-ம் ஆண்டில்தான் நிலத்துக்கு அடியில் எண்ணெய்க்

கிணறு இருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.

இந்தியாவில் முதன்முதலில் 1946-ம் ஆண்டில் சென்னையில் இந்தியாவின் திரைப்படக் கல்லூரி அமைக்கப்பட்டது.

இந்தியாவில் முதன்முதலில் காபிரைட் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் நூல், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திரபிரசாத் எழுதிய "சுயசரித்திரம்' என்னும் நூல்.

இந்தியாவில் முதன்முதலில் 1962-ம் ஆண்டில் தும்பாவில் இந்திய முதல் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது.

இந்தியாவில் மிக அதிக காலம் முதலமைச்சராக இருந்தவர் ஜோதிபாசு (மேற்கு வங்காளம்).

இந்தியாவின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் இருக்கும் இடம் காரக்பூர் (மேற்கு வங்காளம்).

-அ.சிவராமசேது, திருமுதுகுன்றம்.

மனநிறைவு...

தத்துவஞானி சாக்ரடீஸ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவருடன் சிறையிலிருந்த மற்றொரு கைதி நரம்பு இசைக்கருவி ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார். அந்த இசையை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார் சாக்ரடீஸ்.

அந்தக் கைதி இசைக்கருவியை வாசித்து முடித்தவுடன், அவரிடம், "எனக்கு இந்த இசைக் கருவியை வாசிப்பதற்குச் சொல்லிக் கொடுப்பாயா?' என்று கேட்டார்.

அந்தக் கைதிக்கு வியப்பாகப் போயிற்று.

"நாளை உங்களுக்கு மரணதண்டனையாயிற்றே! நாளை உயிரைவிடப் போகும் நீங்கள், இந்த இசைக் கருவியை வாசிக்கக் கற்றுக் கொள்வதால் என்ன பயன்?' என்று கேட்டார்.

அதற்கு சாக்ரடீஸ் சொன்ன பதில் -

"புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்ட மன நிறைவும் மகிழ்ச்சியும் கிடைக்குமே எனக்கு..!'

-மாரிசங்கர்,அம்பாசமுத்திரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com