Enable Javscript for better performance
இந்திய தேசிய கீதத்துக்கு வயது 100- Dinamani

சுடச்சுட

    
    sm15jpg

    1950-ம் ஆண்டு ஜனவரியில்தான் "ஜன கன மண' இந்தியாவின் தேசிய கீதமாகவும் "வந்தேமாதரம்' தேசியப் பாடலாகவும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது.

    இந்திய சுதந்திரத்துக்கு முன்பு "காட் úஸவ் தி கிங் காட் úஸவ் தி குயின்' என்ற பாடலைத்தான் இந்தியர்கள் பாடவேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கட்டாயப்படுத்தினர்.

    இங்கிலாந்து நாட்டு அரசர் மற்றும் அரசிக்காகத்தான் இப் பாடல் பாடப்பட்டது.

    1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிதான் முதன்முதலாக "ஜன கன மண' பாடல் இசைக்கப்பட்டது. கல்கத்தா நகரிலுள்ள இந்தியன் அசோசியேஷன் கட்டிடத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடக்கும்போதுதான் இப் பாடல் பாடப்பட்டது.

    தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணிதான் முதன்முதலில் இந்தப் பாடலைப் பாடினார். மிஷன் நாராயணதாஸ், புபேந்திரநாத் போஸ், அம்பிகா மஜூம்தார் ஆகியோர்

    முன்னிலையில் பாடப்பட்டது.

    1912-ல் "தத்துவ போதினி' பத்திரிகையில் "பாரத விதாதா' என்ற தலைப்பில் இப்பாடல் வெளியானது. பின்னர் அயர்லாந்து நாட்டுக் கவிஞர் ஜேம்ஸ் கஸின்ஸின் மனைவி மார்கரெட்டின் உதவியுடன் இரவீந்திரநாத் தாகூர் இப்பாடலுக்கு இசையமைத்தார்.

    பின்னர் மகோத்சவ விழாவில் கவிஞர்களின் ஜோரசங்கோ இருப்பிடத்தில் பாடப்பட்டது.

    1919-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 28-ம் நாள் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மதனப்பள்ளியில் இருந்த கல்லூரி ஒன்றில், கல்லூரி முதல்வர் ஐரிஷ் கவிஞர் ஜேம்ஸ் கஸின்ஸின் முன்னிலையில் தாகூர் இப் பாடலைப் பாடினார்.

    1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் நாள் நடைபெற்ற மாநாடு "வந்தேமாதரம்' பாடலுடன் தொடங்கி "ஜன கன மண' பாடலுடன் முடிவடைந்தது. 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி நடைபெற்ற அரசியலமைப்பு நிர்ணய சபைக் கூட்டத்தில் இப்பாடல் தேசிய கீதம் எனும் அந்தஸ்துடன் முதன்முதலில் பாடப்பட்டது.

    அப்போதயை துணை சபாநாயகரான மதபூஸி அனந்த சயனம் அய்யங்கார் தேசிய கீதத்தை அனைவரும் பாடும்படி கேட்டுக் கொண்டார். அதனையேற்று பூர்ஜிமா பானர்ஜி வழிநடத்த அனைவராலும் பாடப்பட்டது.

    தேசிய கீதத்தின் "பாரத பாக்ய விதாதா' எனும் வரிகள் பற்றிய ஒரு சர்ச்சையும் உண்டு. 1911-ல் டில்லியில் இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜின் ராஜதர்பார் நடந்தது. அதற்கு சில தினங்களுக்குள்ளாகத்தான் தாகூர் இப் பாடலை இசைத்தார். இவ்வரிகள் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரைக் குறிப்பதாகும் என்றும் வாதிடப்பட்டது. ஆனால், தாகூர் இந்தியாவின் எந்தவொரு ஏற்றத்தாழ்விலும் இந்தியாவை எந்த ஜார்ஜ் மன்னரும் பாதுகாத்ததில்லை என்று 1937-ம் ஆண்டு உறுதிபடக் கூறினார்.

    தாகூரின் "அமர் சோனார் பங்களா' எனும் பாடலை, 1972-ம் ஆண்டு தனிநாடாக மாறியபின் பங்களாதேஷ் தனது தேசியகீதமாக அறிவித்தது.

    இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் தேசிய கீதத்தை எழுதிய பெருமை இரவீந்திரநாத் தாகூரையே சாரும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai