Enable Javscript for better performance
அங்கிள் ஆன்டென்னா- Dinamani

சுடச்சுட

    
    13

    கேள்வி: நீர்யானைகள் ஏன் நீரிலேயே வசிக்கின்றன?
     நீர் யானைகளின் உடல் அமைப்பு அப்படி! அவற்றின் கண்கள், காதுகள் மற்றும் மூக்கு எல்லாம் தலைக்கு மேலே இருக்கின்றன. அதனால்
     நீருக்குள்ளே பெரும்பாலான நேரம் நீர்யானை இருந்தாலும் இவைகள் நீரின் அழுத்தத்தினால் பாதிக்கப்படுவதில்லை. நீர்யானையின் கண்களில் மெல்லிய தோல் போன்ற ஒரு படலம் இருக்கும். இதனால் நீருக்குள்ளே போனாலும்கூட, கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் நீர்யானையால் நன்றா
     கப் பார்க்க முடியும். அதேபோல தனது மூக்கின்
     துவாரத்தையும் தேவைப்படும்போது மூடிக்கொள்ளக்
     கூடிய வசதியை இறைவன் அதற்குக் கொடுத்திருக்
     கிறான். இதனால் மூச்சுவிடுவதற்கும் பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை.
     ஒரு சாதாரண நீர்யானை 3,600 கிலோ எடை இருக்கும். இதனால் அவை நடப்பதற்கு மிகவும் சிரமப்படும். மிகவும் மெதுவாகத்தான் அதனால்
     நடக்க முடியும். நீருக்குள் இருந்தால் நீரின் அடர்த்தியினால் அதன் உடல் லேசானதாகி விடுகிறது. இந்தக் காரணத்தினால்தான் நீர்யானை பெரும்பாலான நேரம் நீருக்குள்ளேயே இருக்கின்றது. வெளியே வந்து வெகுதூரம் வரை அவற்றால் நடக்க முடியும். ஆனால் அதன் உடல் எடையைத் தூக்கிக் கொண்டு நடக்கும்போது மிகவும் வியர்த்துக் கொட்ட ஆரம்பித்துவிடும். இதைத் தவிர்ப்பதற்காகவே நீர்யானை நீருக்குள்ளேயே அடைந்து கிடக்கிறது.
     நீர்யானையால் நீருக்குள் வேகமாகவும் நடக்க முடியும். அது உண்பது, உறங்குவது, குட்டி போடுவது எல்லாமே நீருக்குள்தான்!
     அடுத்த வாரக் கேள்வி
     
     ஏன் ஒட்டகச் சிவிங்கிக்கு மட்டும்
     நீண்..............ட கழுத்து?
     -ரொசிட்டா
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai