Enable Javscript for better performance
கருவூலம்- Dinamani

சுடச்சுட

    
    2

    தங்கப்பாறை!
     மலைச்சரிவில் சாய்ந்து நிற்கும் ஓர் உருண்டையான பாறை மேல் மற்றொரு உருண்டையான பாறை அதுவும் ஒரு விளிம்பில் நிற்க முடியுமா? ஆம்!......இயற்கையால் முடியும்? இப்படி ஓர் அதிசயப் பாறை மியான்மரில் "கியாய்க் டியோ' மலையில் அமைந்துள்ளது! அதை தங்கப்பாறை (THE GOLDEND ROCK) என்று அழைக்கிறார்கள்!
     
     மான்ஸ்டேட் மியான்மரில் இது ஒரு முக்கியமான புத்த புனிதத் தலங்களுள் ஒன்றாகும்! இங்கு புத்தர் கோயிலை "பகோடா' என்று அழைக்கிறார்கள்! இதன் உயரம் 7.3மீட்டர்! ஒரு சிறிய இரும்புப் பாலத்தைக் கடந்தே இந்தப் பாறையை அடைய முடியும்! இப்பாலத்தில் நடக்கவும் இந்தப் பாறையைத் தொட்டு வணங்கவும் பெண்களுக்கு அனுமதியில்லை! ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்!
     புவி ஈர்ப்பு விசைக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ள இப்பாறையின் அடியில் புத்தரின் தலைமுடி புதைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது! அதன் சக்தியால்தான் இந்தப் பாறை இன்றளவும் எத்தனையோ இயற்கைச் சீற்றங்களைக் கடந்தும் உருண்டு விழாமல் நிற்கிறது!
     கியாய்க் டியோ மலையில் (MT.KYAIKTYO) அமைந்துள்ள இப்பாறைக் கோவில் "ஷீடகான் பகோடா' மற்றும் "மஹாமுனி பகோடா' ஆகிய இரு புனிதத் தலங்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடம் வகிக்கும் சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது!
     இப்பாறை கடல் மட்டத்துக்கு மேல் 3600அடி உயரத்தில் (1100 மீட்டர்) அமைந்துள்ளது! சூரிய உதயத்தில் இருந்து சூரியன் மறையும்வரை இப்பாறையின் நிழலில் புத்தரின் திருஉருவம் தெரிவதாக இப்பகுதி மக்கள் நம்புகின்றனர். எனவே புத்தரின் புனித சூத்திரங்க ளை ஜெபித்தபடியே இம்மலைப்பகுதியை சுற்றி வருகின்றனர்! ஆண்கள் தங்க நிற இலைகளை இப்பாறையின் மேல் வைத்து வணங்குகின்றனர்!
     மார்ச் மாதத்தில் வரும் பெüர்ணமி நாளை "டபெüங்' (TABAUNG)
     என்று அழைக்கிறார்கள். அன்று இலட்சக்கணக்கான மக்கள் இத்திருத்தலத்தைத் தரிசிக்கின்றனர். மியான்மரில் வசிக்கும் புத்த மதத்தினர் மட்டுமின்றி சீனா, ஜப்பான், மலேசியா, கொரியா போன்ற நாடுகளில் வசிக்கும் புத்த மதத்தினரும் பிற நாட்டு மக்களும் அன்று இந்த தங்கப் பாறையை தரிசிக்க விரும்புகின்றனர்.
     காரணம் பெüர்ணமி நிலவொளியில் இப்பாறையின் நிழல் ஒவ்வொரு கோணத்திலும் புத்தரின் நிழல் போலவே தோன்றுமாம். அத்திருநாளன்று புத்தருக்கு தமது நன்றியைத் தெரிவிக்கும் வகையில் 90,000 மெழுகுவர்த்திகளால் இம்மலைப்பகுதியை அலங்கரிக்கிறார்கள்! பழம், பூ, போன்றவற்றுடன் வாசனை திரவியங்களையும், ஊதுபத்திகளையும் படைக்கின்றனர்!
     இந்த இயற்கை அதிசயப் பாறையைத் தமது வாழ்நாளில் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு புத்த மதத்தினரின் லட்சியம் ஆகும்.
     என்.லெட்சுமி பாலசுப்ரமணியன், கடுவெளி.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai