Enable Javscript for better performance
குறள் பாட்டு- Dinamani

சுடச்சுட

    
    5

    வலி அறிதல்
     உடைத்தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி
     இடைக்கண் முரிந்தார் பலர்.
                                                    -திருக்குறள்
     தனது வலிமை இதுவென்று
     கணக்குப் போடத் தெரியாமல்
     மனதில் தோன்றிய ஆசையினால்
     முயன்ற செயல்கள் முடிவதில்லை
     
     வலிமையில்லாமல் தூண்டப்பட்டு
     அந்த நேரம் ஊக்கத்தினால்
     தொடங்கித் தொடர்ந்து முயன்றாலும்
     இடையில் விட்டவர் பலருண்டு
     -ஆசி.கண்ணம்பிரத்தினம்
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai