Enable Javscript for better performance
சுற்றுலா!- Dinamani

சுடச்சுட

    
    9

     வானத்தை அடிக்கடி பாருங்கள்
     வண்ணக் கோலங்கள் காணுங்கள்!
     
     கானகம் அடிக்கடி செல்லுங்கள்
     களிப்புடன் மரங்களைப் பாருங்கள்!
     
     அருவிக்கு அடிக்கடி செல்லுங்கள்
     அழகிய நீரொலி கேளுங்கள்!
     
     சிறு சிறு பறவைகள் பாருங்கள்
     செழிப்புள மகிழ்வொலி கேளுங்கள்!
     
     கடற்கரை அடிக்கடி செல்லுங்கள்
     கவின் மிகு அலையொலி கேளுங்கள்!
     
     உடல் நலம் உளநலம் மகிழ்வடையும்
     உண்மையில் இயற்கையின் குணம் தெரியும்!
     
     சுற்றுலா என்பது சுதந்திரமே
     சுகமாய் மாற்றுதல் நம் உணர்வே!
     
     கற்றவை எல்லாம் பயனளிக்கும்
     களிப்புள சுற்றுலா மனம் நிலைக்கும்!
     -நா.மு.நாச்சியப்பன்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai