Enable Javscript for better performance
டாம் சாயரின் சாகசங்கள்- Dinamani

சுடச்சுட

  
  14

  ஞாயிற்றுக்கிழமை. "சர்ச்'க்கு போக வேண்டும். அத்தோடு சிறுவர்களுக்கு "சன்டே கிளாஸ்' உண்டு. டாம் எளிதில் குளிக்க மாட்டான். அவனைப் புறப்பட வைப்பதில் உதவுவதற்காக சித்தியின் மருமகள் மேரி வந்திருந்தார். ஒரு பாத்திரத்தில் தண்ணீரையும் சோப்பையும் டாமுக்குக் கொடுத்தார். அவன் சோப்பை தண்ணீரில் கரைத்து சிறிது நேரம் விளையாடினான். பிறகு தண்ணீரை தரையில் கவிழ்த்தான். உடம்பைத் துடைக்க துண்டு கேட்டு மேரியிடம் வந்தான்.
   "கொஞ்சம்கூட உடம்பில் தண்ணீர்படவில்லையே, குளிப்பதற்கு அவ்வளவு சோம்பேறித்தனமா?' என்று மேரி கேட்டார்.
   மீண்டும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தார். மறுபடியும் "டாம் தண்ணீரில் விளையாடினான். அதைப் பார்த்த மேரியே அவனை குளிப்பாட்டி விட்டார். தலைமுடியை ஒழுங்காக வாரிவிட்டார். டாம் அதைக் கலைத்து விட்டுக்கொண்டான். ஞாயிற்றுக்கிழமைகளில் போடும் ஆடையை அவனுக்குப் போட்டு விட்டார். கால்களில் "ஷு'வையும் மாட்டி விட்டார். டாம் கத்தினான்.
   ""ஷு' போட உனக்குப் பிடிக்கவில்லையா? இதுதானே வேண்டுமென்று அடம் பிடிப்பாய்' என்று மேரி கேட்டார்.
   "நான் ஒன்றும் கேட்கவில்லை' என்று பதிலுக்கு இரைந்தான் டாம்.
   மேரி அவனுக்கு ஆறுதல் கூறினார். "டாம், நீ நல்ல பையன் இல்லையா, எதிர்காலத்தில் கெட்டிக்காரன் ஆக வேண்டாமா?'
   "சர்ச்'சில் பிரார்த்தனைக்கு மணி அடிக்கும் சத்தம் கேட்டது. அதற்கு முன் குழந்தைகளுக்கு "சன்டே கிளாஸ்' நடக்கும். வகுப்பை மிஸ்டர் வால்டேர்தான் நடத்துவார். குழந்தைகள் பைபிளில் உள்ள வசனங்களை ஒப்புவிக்க வேண்டும். வசனங்களை நன்றாக ஒப்புவிப்பவர்களுக்கு டிக்கெட்டுகள் வழங்கப்படும். டாம் ஒருபோதும் டிக்கெட்டுகள் வாங்கியதில்லை. அதிக எண்ணிக்கையில் டிக்கெட் பெற்றிருக்கும் குழந்தைக்கு பைபிள் பரிசாகக் கொடுக்கப்படும்.
   டாம் "சர்ச்' வாசலில் நின்று கொண்டான். அங்கு தன்னுடைய நண்பன் ஒருவனைப் பார்த்தான்.
   "பில்லி உன்னிடம் மஞ்சள் நிற டிக்கெட் இருக்கிறதா?' டாம் கேட்டான்.
   "இருக்கிறது' என்றான் பில்லி.
   "அதற்குப் பதிலாக உனக்கு நான் என்ன தர வேண்டுமென்று சொல்'
   "நீ என்ன கொடுப்பாய்?'
   "ஒரு தூண்டில் தரட்டுமா?'
   "எங்கே காட்டு'
   டாம் தூண்டிலைக் காட்டினான். அதைப் பார்த்த பில்லிக்கு ஆசை உண்டானது. டிக்கெட்டை டாமிடம் கொடுத்து தூண்டிலை வாங்கிக் கொண்டான்.
   டாமின் கால்சட்டை பைக்குள் விளையாட்டுப் பொருள்கள் நிறைய இருந்தன. அங்கு வந்த சிறுவர்களிடம் அதையெல்லாம் கொடுத்து நிறைய டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டான். பத்து நிமிடங்கள் நடந்த வியாபாரத்தில் அங்கிருந்த பையன்களின் டிக்கெட்டுகள் எல்லாம் டாமின் வசம் வந்துவிட்டன.
   கடைசியாக டாம் வகுப்பறைக்குள் நுழைந்தான். ஆசிரியர் வால்டேர் பைபிளிலிருந்து ஒரு கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு மாதிரியான குரலில் ராகம் பாடுவதுபோல் அவர் சொல்வது இருந்தது. அவர் கையில் பைபிள் வைத்திருந்தார்.
   "சன்டே கிளாஸ்'ûஸ பார்வையிட பெரியவர்கள் சிலர் வந்தனர். முதலில் வந்தது திருமதி தாட்சர். அவருடன் நீதிபதி தாட்சரும் அவர்களது மகள் எமிலி லாரன்ஸ்ஸýம் வந்தனர். நீதிபதி தாட்சர்தான் அன்றைய சிறப்பு விருந்தினர். பைபிள் வசனங்களைக் கூறி நிறைய டிக்கெட்டுகள் வாங்கிய மாணவனுக்குப் பரிசு கொடுக்கவே சிறப்பு விருந்தினர் வந்திருந்தார். தன்னிடம் படிக்கும் மாணவன் ஒருவனுக்கு அந்தப் பரிசு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று ஆசிரியர் வால்டேர் நினைத்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கப் போவதில்லை என்பது அவருக்குத் தெரியும். அதிக டிக்கெட்டுகள் வைத்திருக்கும் குழந்தைகள் யார்? என்று அவர் கேட்டார். டாம்சாயர் உடனே எழுந்து வந்தான். பரிசை தனக்குத் தர வேண்டுமென்று கூறினான். கால்சட்டை பைக்குள்ளிருந்து எல்லா டிக்கெட்டுகளையும் எடுத்து ஆசிரியர் வால்டேரிடம் கொடுத்தான். மொத்தம் இருபது டிக்கெட்டுகள் இருந்தன. மற்ற குழந்தைகளிடம் டிக்கெட்டுகள் இல்லை. அவ்வளவுதான். அங்கிருந்த எல்லோரும் கைதட்டினார்கள்.
   ஆசிரியர் வால்டேர்தான் மிகவும் குழம்பிப் போனார். இன்னும் பத்து வருடங்கள் ஆனாலும் கூட டாமினால் வசனங்களை ஒப்புவித்து டிக்கெட்டுகள் வாங்க முடியாது என்பது அவருக்குத் தெரியும். பிறகு எப்படி நடந்தது? டாம்சாயர் விருந்தினர்களுடன் உட்கார வைக்கப்பட்டான்.
   டாமின் நண்பர்களுக்கு பொறாமை தோன்றியது. டாமிடம் டிக்கெட்டுகளைக் கொடுத்தது முட்டாள்தனம் என்று நினைத்தனர்.
   நீதிபதி தாட்சர் டாமிடம் அவனுடைய பெயரைக் கேட்டார். தாமஸ் சாயர் என்று தனது பெயரை முழுமையாகக் கூறினான்.
   "டாம் மிக நல்ல பையன், திறமையானவன். பைபிளில் ஆயிரம் வசனங்களைப் படிப்பது என்பது பெரிய காரியம். எதிர்காலத்தில் டாம் சாயர் மிகப்பெரிய மனிதனாவான்' என்று வாழ்த்தினார் நீதிபதி.
   டாம் சட்டையிலிருந்த பட்டனைத் திருகியபடி விழித்தான்.
   "டாமின் பைபிள் அறிவைத் தெரிந்துகொள்ள எல்லோரும் விரும்புவார்கள்' என்று கூறிய நீதிபதி தாட்சர் டாமிடம், "இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் முதன்மையான இரண்டு சீடர்கள் யார்?' என்று கேள்வி கேட்டார்.
   எதிர்பாராமல் கேட்கப்பட்ட கேள்வி. டாம் வசமாக மாட்டிக் கொண்டான். அவன் கண்கள் அங்குமிங்கும் சுழன்றன.
   டாமினால் இதற்குப் பதில் சொல்ல முடியாதென்று ஆசிரியர் வால்டேருக்குத் தெரியும். ஆனாலும் அவர் அவனிடம் "தம்பி, பயப்படாமல் சொல்லு' என்று உற்சாகப்படுத்தினார்.
   திருமதி தாட்சரும் டாமை உற்சாகப்படுத்தினார். எமிலியும் அவளை ஆர்வமுடன் பார்த்தாள்.
   டாம் பயப்படுகிறவனா, என்ன! ஒரே போடாகப் போட்டான். "டேவிட், கோலியாத்'
   "சன்டே கிளாசில் எழுந்த சிரிப்பொலியால் டாம் அங்கிருந்து சிட்டாகப் பறந்தான்.
   (தொடரும்)
   மூலம்: மார்க் ட்வைன்
   தமிழில்: சுகுமாரன்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai