Enable Javscript for better performance
தகவல்கள் 3- Dinamani

சுடச்சுட

    
    1

    நடவடிக்கை
     மூதறிஞர் ராஜாஜி தமிழகத்தில் முதல்வராகப் பதவி வகித்த காலம். ஒருசமயம் அதிகாரி ஒருவர் ராஜாஜியிடம் வந்து ஒரு குறிப்பிட்ட ஊழியர் லஞ்சம் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவரை உடனே வேறு ஊருக்கு மாற்ற வேண்டும் எனவும் கூறினார். அதற்கு இராஜாஜி, ""லஞ்சம் ஊழலை வேறு ஊருக்கு மாற்றுவது தவறாகும்'' அவர் மீதான புகார்களுக்கு ஆதாரங்களுடன் வாருங்கள். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள ஆவன செய்கிறேன்'' என்று கூறிவிட்டார்.
     கே.என்.பாலகிருஷ்ணன், பெங்களூர்.
     
    புகார் தவிர்!
     இங்கிலாந்து பிரதமராயிருந்த சர்ச்சில் ஓர் ஓவியரும்கூட. இருந்தாலும் இயற்கைக் காட்சிகளை மட்டும்தான் வரைவார். இதுபற்றி ஒருவர் "ஏன் இயற்கைக் காட்சிகளை மட்டும் வரைகிறீர்கள்?'' என வினவ, அதற்கு சர்ச்சில் "தன்னை அழகாக வரையவில்லை என்று எந்த மரமும், செடியும், புல்வெளியும், மலையும் புகார் செய்யாதல்லவா? என சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.
     உ.இராஜமாணிக்கம், கடலூர்.
     
    தயக்கம்
     முதன்முதலாக நிலவுக்குச் சென்று இறங்கிய அமெரிக்க அப்போலோ விண்கலத்தின் விமானி ஆல்ட்ரின். இவர் விண்வெளி அனுபவமுள்ளவர். துணை விமானியான ஆம்ஸ்ட்ராங் கப்பல் படையைச் சேர்ந்தவர். தைரியசாலி என்பதால் தேர்வானவர். அப்போலோ நிலவில் தரை இறங்கியதும், நாசாவிலிருந்து "பைலட் பாஸ்ட்' என கட்டளை வந்தது. ஆனால், ஆல்ட்ரினுக்கு தயக்கம். இதுவரை பார்த்திராத நிலாவின் தரை புதை மணலாக இழுக்குமோ என்ற பயம். சுடுமணலாக கொதிக்குமோ என்ற தடுமாற்றம். சில நொடிகள் ஆல்ட்ரின் தாமதிக்க, நாசாவிலிருந்து உடனே, "கோபைலட் நெக்ஸ்ட்' என்ற கட்டளை
     வந்துவிட்டது. அடுத்த நொடி, நிலவில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்து உலகப் புகழ் பெற்றார், நீல ஆம்ஸ்ட்ராங். இதிலிருந்து என்ன தெரிகிறது? தயக்கம், தடுமாற்றம், பயம், தாழ்வு மனப்பான்மை போன்ற தடைகள் நம் முன்னேற்றத்தைத் தடுக்கும் என்பதற்கு ஆல்ட்ரின் உதாரணம். துணிந்து போராடுபவருக்கு வெற்றி என்பதற்கு ஆம்ஸ்ட்ராங் உதாரணம். நாமும் ஆம்ஸ்ட்ராங்காக ஜெயிப்போம்.
     அ.யாழினி பர்வதம், சென்னை.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai