Enable Javscript for better performance
பூமிப்பந்து!- Dinamani

சுடச்சுட

    
    8

     விந்தை விந்தை பூமியாம்!
     விண்ணில் உருளும் கோளமாம்!
     பந்து சுற்றும் காட்சிபோல்
     பரந்த வானில் சுழலுதாம்!
     
     கடலும் மலையும் ஆறுமே
     காடும் சோலை நிலமுமே
     இடத்தை விட்டு நகராமல்
     இப்பூமியோடு சுழலுதாம்!
     
     கோடி கோடி உயிர்கள்
     கோபுரம் போலும் மரங்கள்
     ஓடிக் குதிக்கும் அருவிகள்
     உலகமோடு உருளுதாம்!
     
     கோடி கோடிப் பந்துகள்
     கோளப் பூமி போலவே
     கூடி நிறைந்து உள்ளதாம்
     காணும் அண்டம் முழுதுமே!
     
     இந்த உருண்டை மீதிலே
     இருக்கும் நமக்கு பயமில்லை!
     எந்தப் பொருளும் வீழுமே
     என்ற அச்சம் இல்லையே!
     
     எண்ண எண்ண விந்தையே
     என்றும் இது ஓர் அற்புதம்!
     இந்த விந்தை எல்லாமே
     இறைவன் தந்த இன்பமே!
     எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai