Enable Javscript for better performance
பொன்மொழிகள்- Dinamani

சுடச்சுட

    
    6

    * அறிவின் பழங்கள் செயல்கள். - தாமஸ் புல்லர்
    * தவறுகளைத் திருத்திக் கொள்ளாததுதான்
     நிஜமான தவறு. - கன்ஃபியூசியஸ்
    * எதிலும் திருப்தி உள்ளவனை யாராலும்
     வெல்ல முடியாது. - கார்னகி
    * புத்திசாலி அறிவில்லாதவர்களிடமிருந்து கூட எதையாவது கற்றுக் கொள்கிறான். - எட்ஹோவ்
    * கடுமையான உழைப்பைத் தவிர வெற்றியின்
     ரகசியம் வேறு இல்லை. - இ.டர்னர்
    * உன் பிறப்புக்குரிய அர்த்தம் வாழ்ந்து சாதனை
     புரிவதே. - வாலேஸ்
    * உழைப்பு மற்றும் தைரியம் மிகுந்தவர்களை அதிர்ஷ்டம் பின்தொடர்கிறது. - டெரன்ஸ்
    * உன் விதியை வகுப்பவன் நீயே. - விவேகானந்தர்
    * வட்டிக்கு வாங்கிய பணத்தில் செலவு செய்பவன் பிச்சைக்காரனைவிட பலமடங்கு
     கஷ்டப்படுவான். - நோபியர்
    * துன்பம் வரும்போது அதிக அளவில்
     துயரப்படுவதோ இன்பம் வரும்போது அதிக
     அளவில் மகிழ்ச்சி கொள்வதோ கூடாது.
     எதிலும் மிதமாய் இருங்கள். அப்போது
     ஆனந்தத்தை, வெற்றியை நீங்கள் நிதானமாய்
     அனுபவிக்க முடியும். - பிளாட்டோ
    * நேர்மை உள்ளவன் தான் சொன்னதை
     நிறைவேற்றத் தவறுவதில்லை. தன்னால்
     முடியாததை ஒருபோதும் சொல்வதில்லை.
     - கன்ஃபியூசியஸ்
     தொகுப்பு : எல். நஞ்சன்
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai