Enable Javscript for better performance
முத்துக் கதை- Dinamani

சுடச்சுட

    
    s5

    ஒரு அரசன் தன்னுடைய சபைக்கு வரும் புலவர்களை எல்லாம் "உனக்குக் கதைகள் தெரியுமா?' என்று கேட்பான். அவர்கள் தங்களுக்குத் தெரிந்த கதைகளைச் சொல்வார்கள்.
     "இவற்றிற்கு மேல் தெரியாதா?'' என்று ஏளனமாகச் சொல்லி அவர்களை அனுப்பிவிடுவார்  அரசன். இவ்வாறு வரும் புலவர்களை எல்லாம் அரசன் இழித்து உரைப்பதை அறிந்த புலவர் ஒருவர், அரசனிடம் ஒருநாள் வந்தார்.
     "உம்முடைய பெயர் என்ன?'' என்று கேட்டான் அரசன்.
     அவர் "கதைக்கடல்'' என்றார்.
     "உமக்கு எத்தனை கதைகள் தெரியும்?'' என்றான் அரசன்.
     "எனக்குத் தெரிந்த கதைகளுக்கு அளவே இல்லை என்பதால் கதைக்கடல் என்று பெயர் பெற்றேன்'' என்றார் புலவர்.
     "கதையைச் சொல்லும்'' என்றான் அரசன்.
     புலவர், "அரசர் பெருமானே! நாலாயிரம் யோசனை அகலமும், ஆயிரம் யோசனை நீளமும் உள்ள ஒரு தடாகத்தில் நீக்கமற நெருங்கி, தாமரைகள் மலர்ந்துள்ளன. அம்மலர்களில் பொன் சிறகுகளுடன் கூடிய அன்னங்கள் கோடானு கோடி வந்து இறங்கும்போது, காற்றோடு மழை கலந்து அடிக்கத் தொடங்கிற்று. அப்போது அப்பறவைகள், அத்துன்பத்திற்கு ஆற்றாது அருகில் இருந்த மலைக்குகைக்குள் புகுந்தன'' என்றார்.
     "அரசன், பிறகு என்ன?'' என்று கேட்டான்.
     "அவற்றில் ஒன்று புறப்பட்டது'' என்றார் புலவர்.
     பிறகு என்ன? என்றான்.
     "மற்றொன்று புறப்பட்டது!'' என்றார் புலவர்.
     இவ்வாறு அரசன் கேட்குந்தோறும் அவ்வாறே, "மற்றொன்று புறப்பட்டது; மற்றொன்று புறப்பட்டது!'' என்று சொல்லிக் கொண்டிருந்தார் புலவர். அரசன் வெட்கமுற்று இப்புலவனை வெல்வது அரிது என்று உபசரித்து பரிசு கொடுத்து அனுப்பி விட்டான்.
    -ஆர். அஜிதா

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai