Enable Javscript for better performance
இறைவி காட்டும் குறிப்பறிவோம்!- Dinamani

சுடச்சுட

    
    s9

     கல்விக் கடவுள் கலைமகளை
     கருத்தாய் தினமும் வணங்கிடுவோம்!
     பள்ளிக் கூடம் சென்று தினம்
     பாடம் நிறையக் கற்றிடுவோம்!
     
     கற்றல் வேண்டும் எனக்காட்ட
     கலைமகள் ஏட்டினைப் பிடித்தாரே!
     முற்றும் உணர்ந்த ஞானம் பெற
     மாலையை எடுத்து செபித்தாரே!
     
     இசையில் இறைவனைத் தேடு! என்றே
     இதய வீணையினை இசைத்தாரே!
     அசையும் பொருளை நிற்கச் செய்யும்
     அற்புத ராகம் படித்தாரே!
     
     இறைவி காட்டும் குறிப்பறிந்து
     இனிதாய் கல்வியைப் பெற்றிடுவோம்!
     குருவாம் சரஸ்வதி பாதம் பணிந்து
     குவலயம் தன்னை வென்றிடுவோம்!
     
     -ரமண ராஜசேகர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai