Enable Javscript for better performance
தகவல்கள் 3- Dinamani

சுடச்சுட

    
    s1

    கோபம் தீர்ந்தது!
    மகாத்மா காந்தி ஒரு நாள் நண்பரின் காரில் சென்று கொண்டிருந்தார். காந்தியின் மீது கோபம் கொண்டிருந்த சிலர் கற்களைக் கார் மீது வீசினர். காரை நிறுத்தச் சொன்ன காந்தி, காரை விட்டு இறங்கி, கற்களை வீசியவர்களிடம், ""கார் நண்பருடையது.... உங்களுக்கு என்மேல்தானே கோபம்? உங்கள் கோபம் தீரும்வரை கற்களை எடுத்து என்மேல் வீசுங்கள்.'' என்றார். கல் எறிந்தவர்கள் அவமானத்தில் தலை குனிந்தனர்.
    புகழேந்தி, ஆறுபாதி.

    கைத்தறி!
    தியாகராஜ பாகவதர் ஒரு சமயம் திருச்சிக்கு வந்திருந்தார். அவரிடம் ஒரு துணி வியாபாரி, ""ரங்கூனிலிருந்து உயர் வகை சாட்டின் துணிகள் கொண்டு வந்திருக்கிறேன்...,வாங்கிக் கொள்ளுங்கள்'' என்றார். அந்த நபரிடம் பாகவதர், ""உங்கள் சாட்டின் துணிகளை நீங்கள் சொன்ன விலைக்கே வாங்கிக்கொள்கிறேன்....ஆனால் இனி கைத்தறித் துணிகளை மட்டுமே விற்பேன் என்று நீங்கள் சத்தியம் செய்ய வேண்டும்'' என்றார். அவரும் வாக்குறுதி அளிக்க, பாகவதரும் துணிகளை வாங்கி கலைமகள் கான சபாவிற்குப் பரிசளித்தார். அன்று முதல் அந்தத் துணி வியாபாரியும் கைத்தறி வியாபாரி ஆனார்!
    ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

    புத்தகம்!
    கி.வா.ஜ., தன் நண்பர் ஒருவரின் புதுமனை புகுவிழாவிற்குச் சென்றார். விழாவிற்கு வந்த ஒருவர் புது வீடு கட்டியவருக்கு ஒரு புத்தகத்தைப் பரிசாகக் கொண்டு வந்திருந்தார். இதைக் கவனித்த கி.வா.ஜ, "புத்தகத்திற்கு வந்த புத்தகம்' இது! என்றவுடன் அனைவரும் அவரது சிலேடை நயத்தை ரசித்து மகிழ்ந்தனர்!
    சுமன், நீலாங்கரை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai