Enable Javscript for better performance
தலையெழுத்து!- Dinamani

சுடச்சுட

    
    s4

    தன் சீடர்களுடன் ஒரு ஆசிரமத்தில் ஒரு குரு வசித்து வந்தார்! ""எல்லாம் தலையெழுத்துப் படிதான் நடக்கும்'' என்று அடிக்கடி சொல்வார் குரு. ஆசிரமத்தில் சில பொருட்கள் திருடு போயின. சீடர்களில் ஒருவன் திருட்டுப் பழக்கம் உடையவனாக இருந்தான். ஒருமுறை அந்தத் திருட்டுச் சீடன் திருடும்போது குருவிடம் வகையாக மாட்டிக் கொண்டான்.
    குரு அவனிடம் கோபம் கொண்டு கன்னத்தில் "பளார்' என்று அறைந்து விட்டார்.
    சீடனுக்கு கோபம் வந்தது. அவன் குருவினிடம், ""இந்தப் பொருள் தொலையவேண்டும் என்றால்கூட அது தலையெழுத்துதானே....., இதற்காக இப்படி அடிப்பானேன்!''என்று கேட்டான்.
    பதிலுக்கு குரு, ""உன்னை அடிக்க வேண்டும் என்பது கூட தலையெழுத்துப்படிதான் நடந்தது!''
    சீடன் அமைதியானான்.
    -மயிலை மாதவன்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai