Enable Javscript for better performance
நூல் புதிது!- Dinamani

சுடச்சுட

    
    S3

    * அறிவியல் அற்புதங்கள்
    ஆசிரியர்: வாண்டுமாமா
    பக்கம்: 288; விலை: ரூ.350.
    விண்வெளி எங்கு முடிவடைகிறது?, தாவரங்கள் இடம் பெயருமா?முயல்களுக்கு காதுகள் நீளமாக இருப்பது ஏன்?, நீந்தத் தெரியாத மீன் உண்டா? இதுபோன்ற 312 கேள்விகளைத் தலைப்புகளாக வைத்துச் சொல்லப்பட்ட அபூர்வ தகவல்கள். மாணவமணிகளுக்குப் பயன்மிக்க நூல்! (வெளியீடு: சேது அலமி பிரசுரம், ஜி-7, அரவிந்த் நரேன் என்கிளேவ், 8, மாசிலாமணி தெரு, தியாகராய நகர், சென்னை-17; போன்: 044-24364243).

    * எட்டுக்கால் குதிரை
    ஆசிரியர்: கொ.மா.கோ.இளங்கோ
    பக்கம்: 48; விலை: ரூ.30.
    எண்களைக் கதாபாத்திரங்களாக்கி எழுதப்பட்ட குறுநாவல். ஒற்றைப்படை எண்களை மாணவர்களாகவும், இரட்டைப்படை எண்களை மாணவிகளாகவும் சித்தரித்திருப்பது நயமான கற்பனை. மாணவமணிகளிடையே நல்லிணக்கத்தை போதிக்கும் நூலாசிரியரும், எண்களை மாணவ
    மணிகளாக வரைந்த ஓவியரும் பாராட்டுக்குரியவர்கள்! (வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18; போன்: 044-24332424).

    * கண்ணன் ஏன் தேம்பித் தேம்பி அழுகிறான்? (கவிதைகள்)
    ஆசிரியர்: இலந்தை சு.இராமசாமி
    பக்கம்: 96; விலை: ரூ.60.
    சந்தத்துடன் பாடி மகிழக்கூடிய 57 பாடல்கள் கொண்ட நூல். கம்ப்யூட்டர், தந்தைக்குக் கடிதம், ஆட்டுக்குட்டி பாயும் ஆட்டுக்குட்டி போன்ற இனிமையான பாடல்களுடன், ஏகலைவன், துருவன் கதைப்பாடல்களும் சிறப்பாக உள்ளன! (வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம், த.பெ. எண்: 1447, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை-17; போன்: 044-24342926).

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai