Enable Javscript for better performance
பதிலை எழுதலாம் நொடியிலே!- Dinamani

சுடச்சுட

    
    s11

    குடு குடு குடு!
    சக்கம்மா வந்து நிக்கறா
    குடு குடு குடு!.....
    ......அடுத்த வீட்டுப் பிள்ளை
    அரை மணி நேரமா படிக்குது!
    இந்த வீட்டுப் பிள்ளை
    இன்னும் எழுந்து படிக்கலே!

    சக்கம்மா தட்டி எழுப்புறா! குடு குடு குடு!.....

    .....அடுத்தவாரம் தேர்விலே
    அதிக மதிப்பெண் வாங்கணும்!
    படுத்துக் கிடந்தா இப்படி
    பதிலை எழுதுவ தெப்படி?.....

    சக்கம்மா வந்து கேட்கிறா! குடு குடு குடு!........

    .......விடியற்காலம் எழும்பணும்
    விளக்கைப் போட்டுப் படிக்கணும்!
    படிஞ்சு போகும் மனசிலே
    பதிலை எழுதலாம் நொடியிலே!

    சக்கம்மா சொன்னா நடக்கும்! குடு குடு குடு..!

    -புலேந்திரன்

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai