Enable Javscript for better performance
அங்கிள் ஆன்டென்னா- Dinamani

சுடச்சுட

    
    s15

    கேள்வி : சிறிய குட்டி மீன்களைப் பார்த்தால் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
     ஆனால் இவற்றிலும்
     பயங்கரமானவை இருக்கின்றன என்கிறார்களே, உண்மையா?
     
     பதில் : இதில் உண்மை இருக்கத்தான் செய்கின்றது.
     கடல் மீன்களிலேயே அரை அடி நீளமே இருக்கும் பிரானாஎன்னும்
     வகை மிகவும் ஆபத்தானவை. அளவில் சிறியதாக இருந்தாலும் இவற்றை தாதா, கேடி போன்ற இனத்தில் சேர்க்கலாம்.
     எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும், இவை அவற்றுக்குப் பயப்படுவதில்லை.... அவற்றை விட்டு வைப்பதுமில்லை. நூற்றுக்கணக்கில் படையெடுத்து வரும் இவை ஒவ்வொன்றும் மிகக் கூர்மையான பற்களைக் கொண்டவை. ஒரு சிறிய மீன் கடிக்கும் கடியில் ஐம்பது கிராம் சதையாவது பிய்ந்து வந்து விடும் என்கிறார்கள். அவ்வளவு பயங்கரமானவை. கூட்டமாகச் சேர்ந்து வந்து பெரிய சைஸ் மீன்களை, மிகவும் தைரியமாகத் தாக்குபவை. இவற்றின் சமயோசித புத்தியும் அபாரமானது. பெரிய மீன்களைத் தாக்கும்போது, முதலில் சாதுர்யமாக அதன் வாலைத் துண்டித்து விடுகின்றன. இதனால் அந்தப் பெரிய மீன் விரைவாக நீந்தித் தப்பிக்க முடியாமல் போய் விடும்.
     தென் அமெரிக்கக் கடற்பகுதியில் அதிகமாகக் காணப்படும் இந்த மீன்கள், கடலில் இறங்கும் எந்த
     உயிரினத்தையும், சமயங்களில் மனிதர்களைக் கூடத் தாக்கும் வல்லமை படைத்தவை. துண்டு துண்டாகக்
     கடித்து ஆளைச் சாய்த்து விடும்.
     இவற்றை வைத்து ஒரு ஆங்கிலப்படம்கூட வெளி வந்தது.
    - ரொசிட்டா
    அடுத்த வாரக் கேள்வி
     கண்கொத்திப் பாம்பு என்று ஒரு பாம்பு
     இருக்கிறதாமே, அது கண்ணைக் குறி பார்த்துக்
     கொத்துமாமே? இது உண்மையா?
     பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai