Enable Javscript for better performance
கருணையின் பலன்!- Dinamani

சுடச்சுட

    
    s5

    முத்துக் கதை
     'கபுக்தகீன்' என்னும் மன்னன் முதலில் ஏழையாக இருந்தான். அப்போது அவன் சாதாரணச்சிப்பாயாக இருந்தான். ஒரு நாள் அவன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான். அன்று அவனுக்கு வெகுதூரம் அலைந்து திரிய நேரிட்டது. வெகுதூரம் சென்றபின் ஒரு பெண்மானையும், அதன் குட்டியையும் பார்த்தான். அவன் அதன் பின்னால் குதிரையைச் செலுத்தினான்.
     ஆனால் பெண் மான் பயத்தால் ஒரு புதரில் ஒளிந்து கொண்டது. ஆனால் அதன் குட்டி பின்னால் தங்கிவிட்டது. கபுக்தகீன் குட்டியின் காலைக் கட்டி குதிரையின் மேல் வைத்தான். அவன் மிகவும் தேடி அலைந்தும் பெண் மான் கிடைக்காததால் அந்தக் குட்டியை மட்டும் எடுத்துக்கொண்டு திரும்ப நேரிட்டது.
     தன் குட்டியை வேட்டைக்காரன் கட்டி எடுத்துச் செல்வதைப் பார்த்த தாய்மான் குழந்தைப் பாசத்தால் புதரிலிருந்து வெளியே வந்தது. அந்த மான் கபுக்தகீனுடைய குதிரையின் பின்னால் ஓடத் தொடங்கியது. வெகு தூரம் சென்ற பிறகு கபுக்தகீன் திரும்பிப் பார்த்தான்! தன் பின்னால் பெண்மான் ஓடி வருவதைக் கண்டு அவனுக்கு வியப்பும் கருணையும் ஏற்பட்டது! அவன் குட்டியின் கால் கட்டை அவிழ்த்துக் குதிரையிலிருந்து இறக்கி விட்டான்! பெண்மான் மகிழ்ந்து தன் குட்டியுடன் வனத்தினுள் ஓடிவிட்டது!
     கபுக்தகீன் வீடு திரும்பினான். அன்றிரவு உறங்கும்போது ஒரு கனவு கண்டான்! அதில் யாரோ ஒரு தேவதூதன், ""கபுக்தகீன்! நீ இன்று ஓர் எளிய பெண் மானிடத்தில் கருணை காட்டியதால் இறைவன் சந்தோஷமடைந்து உன் பெயரை மன்னர்களின் பட்டியலில் எழுதியிருக்கிறார். நீ நிச்சயம் ஒரு நாள் மன்னன் ஆவாய்!'' என்று கூறினான்.
     கபுக்தகீனுடைய கனவு உண்மையானது. பின்னாட்களில் அவன் மன்னனானான்! ஒரு பெண்மானிடம் இரக்கம் கொண்டதற்கு அவனுக்கு இந்த வெகுமதி கிடைத்தது! யார் உயிரினங்களுக்கு இரக்கம் காட்டுகிறார்களோ அவர்களுக்கு கடவுள் கருணை செய்கிறார்!
     ஆதாரம்-பயனுள்ள கதைகள்.
     
     -சரஸ்வதி பஞ்சு
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai