Enable Javscript for better performance
கருணை மிக்க துறவி!- Dinamani

சுடச்சுட

    
    s6

    கதைப்பாடல்
     ஆற்றங்கரையின் ஓரத்தில்
     அமைதி ததும்பும் நேரத்தில்
     தோற்றப் பொலிவு மிக்கவொரு
     துறவி நடந்து வந்தாராம்!
     
     அலைகள் மோதும் நீரினிலே
     அல்லல் பட்டு ஒரு தேளும்
     அலைந்து தவித்து கரைசேர
     அதிகச் சிரமப் பட்டதுவாம்!
     
     பார்த்த துறவி பரிவோடு
     பையக் கையை உள்விட்டு
     கூரிய கொடுக்குத் தேளினையே
     கரையில் தூக்கிப் போட்டாராம்!
     
     தொட்ட துறவி கைகளிலே
     துளியும் இரக்கம் இல்லாமல்
     கொட்டி விட்டு அத்தேளும்
     குதித்தது மீண்டும் ஆற்றுக்குள்!
     
     மீண்டும் தவித்த அத்தேளை
     மீட்கும் எண்ணம் மிகக்கொண்டு
     தூண்டில் போலக் கைநீட்டி
     தூக்கிப் போட்டார் மறுபடியும்!
     
     மீண்டும் அத்தேள் அவர் கையில்
     அதிக வலிமை மிகக்கொண்டு
     கோணல் கொடுக்கால் கொட்டிவிட்டு
     குதித்து விழுந்தது ஆற்றுக்குள்!
     இந்தச் செயலைக் கண்ணுற்று
     எரிச்சல் கொண்ட ஓர் மனிதன்
     அந்தத் துறவியை அருகழைத்து
     ஆத்திரம் கொண்டு கேட்டாராம்!
     
     ""தேள்தான் உமது கரங்களிலே
     திரும்பத் திரும்பக் கொட்டியதே...
     பாழாப் போன அதைக்காக்க
     பாவம் நீர் ஏன் தவிக்கின்றீர்?
     
     சாக விட்டுப் போமய்யா...''
     என்றே சொன்னார் சாதுவிடம்!
     ""நோக்கிக் கொட்டுதல் தேளியல்பு
     நேசம் காட்டுவதென் பண்பு!''
     
     என்றார் துறவி புன்சிரித்து.
     எல்லோர் மாட்டும் அன்பதனை
     நின்று வழங்கும் மானிடர்கள்
     நிலைத்த புகழைப் பெறுவார்கள்
     
     
     -வளர்கவி

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai