Enable Javscript for better performance
தகவல்கள் 3- Dinamani

சுடச்சுட

    
    s1

    நற்பெயரா? நற்காரியமா?
     மத்திய மந்திரியாக இருந்து விலகும் தறுவாயில் இராஜாஜி, பத்திரிகை மசோதாவைக் கொண்டுவந்து அதைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டார்! இதனால் நாடெங்கும் பத்திரிகைகள் அவரைத் தாக்கி எழுதின. ""பதவியிலிருந்து விலகும் தறுவாயில் ஏன் இப்படிக் கெட்ட பெயர் வாங்க வேண்டும்?'' என்று பாராளுமன்றத்தில் சிலர் கேட்டனர். அதற்கு இராஜாஜி, ""நான் ஒன்றைச் செய்யும்போது அதனால் நல்லபெயர் வருமா...., கெட்ட பெயர் வருமா என்று யோசிப்பதில்லை! அந்தக் காரியம் சரியா...,தவறா என்றுதான் யோசிப்பேன்...நீங்களும் பாப்புலாரிட்டி பற்றி யோசிக்காமல் ஒரு காரியம் நல்லதா....,கெட்டதா என்று மட்டும் யோசித்து செய்யுங்கள்''
     சரஸ்வதி பஞ்சு, திருச்சி.
     
    கனியிருப்பக் காயா?
     கி.வா.ஜ வும் அவர் நண்பர் ஆதிசேஷய்யாவும் சேர்ந்து ஒரு அன்பர் வீட்டிற்குச் சென்றனர். அன்பரின் வீட்டு முற்றத்தில் சிவப்பாக நன்றாக பழுத்த மிளகாய்ப் பழங்களையும், தேங்காய்த் துண்டுகளையும் காய வைத்திருந்தனர். ஆதிசேஷய்யா ஒரு தேங்காய்த் துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். உடனே கி.வா.ஜகன்னாதன், "பழம் இருக்கும்போது காயைச் சாப்பிடுகிறீர்களே....கனியிருப்பக் காய் கவர்ந்து உண்ணலாமா?''என்று கேட்கவும் அங்கு எழுந்த சிரிப்பலை அடங்க சிறிது நேரம் ஆகியது!
     ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
     
    தாயுள்ளம்!
     ஆம்ஸ்ட்ராங்கின் தாயாரிடம் ஒரு நிருபர், "உங்கள் மகன் நிலவில் முதன் முதலில் கால் பதித்த நிகழ்ச்சிதானே உங்களால் மறக்க முடியாதது?''என்று கேட்டார். இதற்கு ஆம்ஸ்ட்ராங்கின் தாய், "உலகத்தில் எல்லோருக்கும் என் மகன் நிலவில் கால் பதித்த நேரம் மகிழ்ச்சியைத் தந்தது! ஆனால் எனக்கு என் மகன் அவன் திரும்பி வந்து பூமியில் கால் பதித்த நேரம்தான் சொல்ல முடியாத மகிழ்ச்சியைத் தந்தது!'' என்றார். நிருபரின் கண்களில் நீர்!
     அ.ராஜாரகுமான், கம்பம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai