Enable Javscript for better performance
நூல் புதிது!- Dinamani

சுடச்சுட

    
    s12

    • ஒரு வாக்கிய மின்மினிக் கதைகள்
      ஆசிரியர்: பேராசிரியர் சேவியர் அந்தோனி சே.ச
      பக்கம்: 96; விலை: ரூ.60
    ஹைக்கூ கவிதைகளைப் போன்ற வடிவத்தில் ஹைக்கூ கதைகள். பல தலைவர்கள், அறிஞர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளையும் தம் கற்பனை வரிகளால் நகைச்சுவை ததும்ப அழகூட்டியிருக்கிறார் நூலாசிரியர். மொத்தம் 132 கதைகள். ஒவ்வொன்றும் தனிச்சுவை! (வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை-17; போன்: 044-24334397).

    • பிஞ்சு நிலா (குழந்தைகள் தமிழறிவுப் பாடல்கள்)
      ஆசிரியர்: கவித்தென்றல் வெங்கடேசபாரதி
      பக்கம்: 160; விலை: ரூ.60
    குழந்தைகள் இசையோடு பாடிப் பழகுவதற்கு ஏற்ற இனிய பாடல்களின் தொகுப்பு. மாணவர்கள் "ழ', "ள', "ல' எழுத்துக்களை உச்சரித்துப் பழக உதவும் நூல். இலக்கண விடுகதைப் பாடல் மிக நன்று. மொத்தம் 133 தலைப்புகளில், இனிய தமிழ் நடையில் பாடல்களைப் புனைந்திருக்கிறார் நூலாசிரியர்! (வெளியீடு: தமிழ் அன்னை பதிப்பகம், 31, ஆட்டா நகர், சிவபுரி சாலை, சிதம்பரம்-608002).

    • அறிவியல் அதிசயங்கள்
      ஆசிரியர்: வாண்டுமாமா
      பக்கம்: 264; விலை: ரூ.350.
    நீரூற்றுகள் உண்டாவது எப்படி?, எரிமலை ஏற்படுவது ஏன்? புற்றுநோயை ரேடியம் கதிர் எவ்வாறு குணப்படுத்துகிறது? என்பதுபோன்ற நூற்றுக்கணக்கான அரிய தகவல்கள் நிறைந்த நூல். அறிவியல் களஞ்சியம் என்றே கூறலாம். அறிவியல் அற்புதங்கள் நூலில் ஆசிரியர் எழுதிய முன்னுரையை அப்படியே இதிலும் போட்டிருக்கிறார்கள். பயன்மிக்க நூல்! (வெளியீடு: சபரீஷ் பாரதி, ஜி-1, அரவிந்த் நரேன் என்கிளேவ், 8, மாசிலாமணி தெரு, தியாகராய நகர், சென்னை-17; போன்: 044-24364243).
      
      

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai