Enable Javscript for better performance
பொன்மொழிகள்- Dinamani

சுடச்சுட

    
    s4

    • பெரிய வேலைகளை மேதைகள் ஆரம்பிக்கிறார்கள். உழைப்பு ஒன்றே அவற்றை முடித்து வைக்கிறது.
     - யாரோ
    • மாபெரும் பொறுமையே மேதைமை.
     - பஃப்பான்
    • மிகப்பெரிய உண்மைகள் மிக எளிமையானவை. அதைப் போலத்தான் பெரிய மனிதர்களும். - ஹேர்
    •முட்டாள்களின் இதயம் அவனுடைய வாயில் இருக்கிறது. ஆனால் அறிவாளிகளின் வாயோ அவர்களின் இதயங்களில் இருக்கிறது. - பெஞ்சமின் பிராங்ளின்.
     • பெரிய மனிதர்களின் பெயர்களும், நினைவுகளும் ஒரு நாட்டின் சீதனம்.
     - வில்லாரி
    • மேதைகள் தாங்கள் கண்டுபிடிப்பதைவிட அதிகமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுகிறார்கள்.
     - பிரான்சிஸ் பேகன்
    • தேனீ பலவகை மலர்களில் இருந்து தேனைச் சேகரிப்பதுபோல் அறிவாளிகள் பல்வேறு நூல்களின் சாரங்களை சேமித்து வைத்துக் கொள்வார்கள்.
     - பாகவத புராணம்
    • மேதை எனும் விளக்கு வாழ்க்கை எனும் விளக்கைவிடச் சீக்கிரமாக எரிகிறது.
     - ஹில்லர்
    • பெரிய மனிதர்கள் பணிவிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
     - லாண்டர்
     -சரஸ்வதி பஞ்சு
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai