Enable Javscript for better performance
விடுகதைகள்- Dinamani

சுடச்சுட

    
    s13

    1. வாழ்நாள் முழுவதும் ஆடினாலும், களைப்பே அடையாதவர்கள்...
     யார் இவர்கள்?
     2. தாவித் தாவிச் செல்லுமாம் குதிரை...
     தாவத் தாவக் குறையுமாம் வால்... இது என்ன?
     3. வெள்ளையடித்த வீட்டுக்கு இரண்டு புறமும் கூரை, ஆனால் கதவோ, ஜன்னலோ இல்லை... இது என்ன?
     4. அடிக்க அடிக்க கண்ணீர் வழிந்தது... கண்ணீரால் பாத்திரமும் நிறைந்தது...
     5. மரத்திலே பழம், பழத்திலே மரம்... இது என்ன?
     6. எத்தனை அடி அடித்தாலும் அவனுக்கு வலிக்காது... அடிப்பவனுக்குத்தான் வலிக்கும்... யார் இவன்?
     7. வாய் இல்லாதவன் சத்தம்போட்டுச் சிரிக்கிறான்... கண்ணில்லாதவன் கண்ணீர் விடுகிறான்...
     8. தலையில்லாதவன், முங்கி முங்கி தண்ணீர் கொண்டு வருகிறான்... யார் இவன்?
     9. ஓரடி நீளம்கூட இருக்க மாட்டான்...
     ஆனாலும் ஒருவரைச் சுமக்கின்றான்...
     யார் இவன்?
    விடைகள்:
     1. கண் இமைகள்
     2.தையல் ஊசி, நூல்
     3. முட்டை
     4. அடிபம்பு குழாய்
     5. அன்னாசிப்பழம்
     6. உரல்
     7. மழை மேகம்
     8. கிணற்று வாளி
     9. செருப்பு
    ரொசிட்டா
     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai